அமில வீச்சுகளைக் கட்டுப்படுத்த லோக் சத்தா கட்சியின் பரிந்துரைகள்

Sunday, March 3rd, 2013 @ 2:53PM

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு, தண்டனை மற்றும் நீதி, பலத்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள்.

 • அமில விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகள். செறிவூட்டப்பட்ட அமிலம் எளிதாக கிடைக்காத வண்ணம் செய்யும் சட்டங்கள்.
 • அமிலத்தின் தீய தாக்கத்தை குறைக்கும் வண்ணம் உடன்படிக்கை ஏற்படுத்த, அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் ஆதரவு திரட்டுதல். உற்பத்தியாளர், பகிர்ந்து வழங்குபவர், வணிகர்கள், தொழில்புரிவோர் மற்றும் தனி நபர்கள் யாவரும்அமிலத்தை கையாளும் முறை, பாதுகாப்பாக வைத்தல், முத்திரைச் சீட்டு ஒட்டுதல், இடமாற்றம் மற்றும் அமில அழிப்பு ஆகியவை உடன்படிக்கையில் அடங்கும்.
 • அமில வீச்சின் உடனே தேவைப்படும் முதலுதவி சிகிச்சை மிக முக்கியமானது. அனைத்து சுகாதார மையங்களுக்கும் அமில வீச்சிற்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்த ஆவணம் சுகாதார துறையால் வழங்கப்பட வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமிலம் உடலை அரிக்காமல் உடனடியாக மட்டுப்படுத்தும் முதலுதவி சிகிச்சைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்.
 • அமில வீச்சால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நோயாளிக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட கூடாது.
 • அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.
 • அமில சிகிச்சைக்கான சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துதலில் கூடுதல் கவனம். அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர் பழைய நிலைக்கு திரும்பும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு மருத்துவ அணி உருவாக்கம். அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர் இழந்ததைப் பெற்று இந்த சமூகத்தில் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ போதுமான அளவு உணவு வல்லுனர் மற்றும் மருத்துவ ஆலோசகர்களை சுகாதார துறையில் பணியமர்த்தல். இந்த நீண்ட கால சிகிச்சை யாவும் பாதிக்கப்பட்டவருக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
 • அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர் பழைய நிலைமயில் மீண்டும் வாழ அவருக்கு தேவையான வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்குதல்.
 • உச்சநீதிமன்றம் மற்றும் 226வது நீதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் பரிந்துரைத்தபடி குற்ற விளைவுகளுக்கான நஷ்ட ஈடு வாரியம் அமைத்து போதிய, தாமதமில்லாத நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும்.
 • அமிலம் வீசிய குற்றவாளி தன் நிகழ்கால மற்றும் எதிர்கால சொத்துகளிலிருந்து பாதிக்கப்பட்டவருக்கு உதவித் தொகை வழங்கும்படி செய்தல்.
 • அமில வீச்சுக் குற்றங்களுக்கு தனியொரு சட்டம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட வேண்டும். அந்த வகை குற்றவாளிகளுக்கு எந்த விதமான அனுதாபமும் தேவையற்ற காரணத்தால் அவர்களுக்கு பிணையோ, தண்டனை கால நன்னடத்தை விதிகளோ வழங்கக்கூடாது.
 • அமிலம் வீசியவர் உறுதிசெய்யப்பட்ட பிறகு அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை அவருக்கு வழங்கி, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை.
 • காயங்கள் ஏற்படாத அமில வீச்சி முயற்சிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளும் தேவைபட்டால் 7 ஆண்டுகள் தண்டனை.
 • குற்றத் தடுப்புகளுக்கென சிறப்பு காவலர்கள். ஆணினம், பெண்ணினம் உணர்ந்த காவல் அதிகாரிகள்.
 • தண்டனை விரைவாக வழங்க நடவடிக்கை. குற்றவாளிகள் தப்பாத வண்ணம் சிறந்த வழக்கு வல்லமை.
 • லோக் சத்தா கட்சி இந்த பரிந்துரைகளை மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள சமர்ப்பிக்கிறது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: