அரசு கேபிள் டி.வி அலுவலகம் – ஒரு பார்வை

Wednesday, March 27th, 2013 @ 9:57AM

arasu-cableகடந்த 2 மாதங்களாக குடும்ப அட்டைகளின் குறை தீர்ப்பு முகாமிற்கும், சென்னை குடிநீர் வாரிய குறை தீர்ப்பு கூட்டத்திற்கும் சென்ற நாம் இந்த முறை தேர்ந்தெடுத்த இடம் – கொஞ்சம் வித்தியாசமானது – அரசு கேபிள் டிவி அலுவலகம். இங்கு குறை தீர்ப்பு கூட்டங்கள எதுவும் நடைபெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின் தலைநகரத்தில் இப்படி ஒரு அலுவலகம் உள்ளதா என்பதே நிறைய பேருக்கு ஆச்சர்யம். சென்னையில்தான் அரசு கேபிள் சேவை இல்லையே, பின்னர் எதற்கு இந்த பயணம் என நீங்கள் நினைக்கலாம். அரசு கேபிள் நிறுவனம் சென்னையில் இயங்குகிறது என உறுதி செய்த நாம் அந்த இடத்திற்கு பயணப்பட்டோம்.

நுங்கம்பாக்கத்தின் ஒரு குறுகிய சாலையில் இயங்கும் அலுவலகம் அது. நம்மை பார்த்த காவலாளி நாம் யார் என விசாரிக்க நாம் தகவல் தெரிவித்தோம். இந்த அலுவலகத்திற்குப் பொது மக்கள் யாரும் வரக்கூடாது என்ற அவாின் பதில் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. பொதுமக்கள யாரும் அனுமதிக்கப்படாத அரசு அலுவலகம் எதற்கு? என்ற நம் கேள்விக்கு, கொஞ்சம் சுதாரித்தவர் பார்வையாளர்கள் நேரம் காலை 10 முதல் 12 வரை எனவும், நாம் அந்த நேரத்தில் மட்டும்தான் வர வேண்டும் எனவும் கூறினார்.

இது அரசு அலுவலகம்தானே, அரசு அலுவலகங்கள் மாலை 5.45 வரை இயங்க வேண்டும்தானே என்ற நம் கேள்விக்கு நம்மை காத்திருக்க சொல்லி உள்ளே சென்று அனுமதி வாங்கி வருவதாக சொன்னார். உள்ளே சென்ற நமக்கு மீண்டும் அதே கேள்விகள் – இந்த முறை ஒரு பெண் அதிகாரியிடமிருந்து. நாம் லோக் சத்தா கட்சியிலிருந்து வந்திருப்பதாகவும், புகார் மனு அளிக்க வேண்டும் என்றதற்கு, இங்கு யாரும் புகார் கொடுக்க வந்ததில்லை என்று இவரும் அதிர்ச்சி கூட்டினார். நம்மிடம் தொடர் கேள்விகள் கேட்கப் பட்டதற்கு, நாம் அவரின் பெயர் மற்றும் வகிக்கும் பதவி குறித்து கேள்வி எழுப்பினோம். உடனே நம்மை ‘துணை ஆட்சியரை’ பார்க்குமாறு பணித்(ந்)தார். துணை ஆட்சியர் நம் புகாரை கேட்க, அதற்கு முன் நமக்கிருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சொன்னோம்.

கேள்வி: அரசு கேபிள் சேவை எந்தெந்த மாவட்டங்களுக்கு எப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டது?
பதில்: 31 மாவட்டங்களுக்கும் 2.09.2011 லிருந்து அரசு கேபிள் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டது. மாதம் 70 ரூ மட்டும் வசூலிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 2012 முதல் சென்னையிலும் அரசு கேபிள் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி: அரசு கேபிள் சேவை அல்லது கட்டணம் குறித்து இது வரை வந்த புகார்கள் எத்தனை?
பதில்: எழுத்துப் பூர்வமாக இது வரை எந்த புகாரும் வரவில்லை.

கேள்வி: எழுத்துப் பூர்வமற்ற புகார்களின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்: தெரிவிக்க முடியாது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் லோக் சத்தா கட்சி இது வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அரசு கேபிள் தொகையான ரூ.70-ஐவிட அதிகம் வசூலித்ததை தட்டி கேட்டு, தொடர் மனுக்கள், முற்றுகை, போராட்டம் என பல்முனை போராட்டம் நடத்தி, தற்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள சரியான தொகையான ரூ.70 மட்டும் கட்டும் வண்ணம் செய்துள்ளது. அனைத்து மாவட்ட மக்களும் சரியான தொகையான ரூ.70 மட்டும் செலுத்த வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணத்தில்தான் இந்த பயணத்தை நாம் மேற்கொண்டோம். எங்கெல்லாம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டி ஒரு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் செலுத்தும் முறைக்கு இணையம், காசோலை, வரைவு காசோலை, நேரடியாக தாசில்தார் அலுவலகத்திலேயே செலுத்துதல் போன்ற பல்வேறு கட்டண முறைகளை கொண்டு வரவும் தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்த பிப்ரவரி 20 அன்று நம் உரத்த குரல் அரசின் காதுகளை எட்டியுள்ளது. முதல்படியாக இனிமேல் மக்கள் இணையத்தின் மூலம் அரசு கேபிள் கட்டணம் ரூ.70 செலுத்தலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அறிந்த கேபிள் ஆப்பரேட்டர்கள் இதை முடக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுப்பதாய் அறிகிறோம்.

நம் பயணம் தொடரும்…

– காவல் கழுகு

Categories: Article, March 2013, Whistle, அரசு அலுவலகங்கள் பார்வையிடல்

1 Comment to "அரசு கேபிள் டி.வி அலுவலகம் - ஒரு பார்வை" add comment
PSMAYO
October 14, 2013 at 6:22 pm

Hi, so nice to see an excellent article on the Arasu Cable.

It seems Arasu made a huge investment to enter Chennai but they seem to have just ignored the city and no word from both Arasu or the State govt for a very long time on serving the chennai people. Any idea on when Arasu cable be available in Chennai?

and why cant Arasu use its CAS license/Analogue to serve the Chennai public when another MSO can do it?

While serving the entire TN for Rs 70 they can easily make good revenue by placing 3 packages in Chennai at Rs 70 for basic (similar to scv analogue), Rs 100 or 125 for tamil, english and sports channels and Rs 150 for tamil english, sports and other language channels and with the surplus revenue made from the higher tariff they can easily offer the Set top box free of charge or on a reasonable rent or the people can asked to purchase one for themselves from the market so both the sale and service is taken care by the private party that sells.

Though Arasu has completely forgot Chennai they can at-least give some name sake announcements once in a while so at-least we people can have some (false) hope.

I think that you are the only functioning organization that raises questions about Arasu’s functionality and i feel that none other than you would be the best place to raise this query.

Good luck on your service.

Thanks.

Leave a Reply

%d bloggers like this: