புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?

Friday, March 15th, 2013 @ 9:42PM

இன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டை அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது.

பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள் வாங்கவும், அடையாளச் சான்று மற்றும் இருப்பிட சான்றாகவும் பயன்படுத்தப்படுவதால் குடும்ப அட்டை அவசியமாகின்றது.

இலஞ்சம் கொடுக்காமல் சட்ட விதிமுறைகளின்படி குடும்ப அட்டைப் பெறும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

புதிய குடும்ப அட்டைப் பெற தகுதி உடையவர்கள் யார்?

 • விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
 • விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் பெயர், தமிழ்நாட்டின் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.

தனியாக விண்ணப்படிவம் உள்ளதா?

ஆம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்ப படிவம் தனியாக உள்ளது. www.consumer.tn.gov.in என்ற இணைய தளத்திலும் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும்?

 • சென்னை மற்றும் புற நகர பகுதிகளை சேர்ந்தவர்கள் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவுப்பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
 • சென்னை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வட்ட வளங்கள் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
 • கோயம்பத்தூர் மாநகரத்தில் வசிப்பவர்கள் மட்டும் உதவி பங்கீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
 • விண்ணப்பத்தினை பதிவு தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாக கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்?

தமிழ் நாட்டில் மனுதாரர் வசிப்பதற்கான முகவரி ஆதாரத்தின் நகல் கீழ்கண்ட ஏதேனும் ஒன்று இணைக்கப்படவேணடும்.

 • தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
 • சொந்த வீடாக இருப்பின் சொத்து வரி ரசீது
 • மின்சார கட்டண ரசீது
 • தொலைபேசி கட்டண ரசீது
 • பேங்க் பாஸ் புக்
 • பாஸ்போர்ட்
 • வாடகை ஒப்பந்தம்
 • முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்குப் பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று
 • பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கம் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று
 • முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று
 • கேஸ் சிலிண்டர் இணைப்பு இருப்பின் அதன் விலாசம்.

நேரில் ஆய்வு

அதிகாரிகள் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா என ஆய்வு செய்வார்கள்.

எத்தனை நாட்களில் குடும்ப அட்டை கொடுக்கப்பட வேண்டும்?

விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கபடாததற்கு காரணம் சொல்லவேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

ரூ.5 கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும். இலஞ்சம் யாருக்கும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

கால தாமதமானால், கொடுக்க மறுத்தால்?

கொடுக்க மறுக்கும் உண்மை காரணத்தை மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

வேண்டுமென்றே கொடுக்க மறுத்தால் காலதாமதம் செய்தால் சென்னை பகுதியில் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வளங்கள் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்ய வேண்டும். அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும்.

சான்றுகள் பெற கால அவகாசம்?

 • பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் சான்றுப் பெற 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.
 • முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் 3 நாட்களுக்குள்
 • முகவரி மாற்றம் கடை மாற்றத்துடன் 7 நாட்களில்
 • குடும்ப அட்டை ஒப்படைப்பு சான்று (வேறு மாநிலம் இதர நகரங்களுக்கு 2 நாட்கள்)
 • மாநிலத்திற்கும் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுக்கா முகவரி மாற்றம் 7 நாட்களில்.
 • புதிய குடும்ப அட்டை 60 நாட்களில்
 • நகல் குடும்ப அட்டை பெற 45 நாட்களில்
 • குடும்ப அட்டை இல்லா சான்று 7 நாட்களில் கொடுக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட சான்றுகள் பெற உதவி ஆணையாளரிடம் அல்லது வட்ட வளங்கள் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு “லோக் சத்தா” கட்சியை அணுகுங்கள்.

– சிவ. இளங்கோ

Categories: Article, Feb 2013, Whistle
Tags: , ,

8 Comments to "புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?" add comment
subramanian k k
October 8, 2013 at 11:20 am

அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்
என்னக்கு வோட்டர் ID கார்டு தேவை பலமுறை வின்னபித்தும் கிடைக்க பெறவில்லை கடைசியாக மார்ச் மாதம் 2013 ம் விண்ணப்பம் செய்தேன் பயனில்லை எப்படி முயற்சி செய்வது ?

sakthivel s/o subramani
December 24, 2013 at 8:55 pm

அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்
என்னக்கு குடும்ப அட்டை தேவை பலமுறை வின்னபித்தும் கிடைக்க பெறவில்லை 2010 ம் ஆன்டு விண்ணப்பம் செய்தேன் பயனில்லை எப்படி முயற்சி செய்வது

tnlspadmin
December 26, 2013 at 12:58 pm

அய்யா, தங்களுடைய கைபேசி எண்ணை எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

C. HARI
July 15, 2014 at 3:16 pm

DEAR SIR/MADAM,
I HAVE NO OLD RATION CARD THEN HOW CAN I APPLY NEW RATION CARD, CAN U GIVE ME SOME SUGGESTION.

THANKU
HARI

veeramani n
December 9, 2014 at 8:39 pm

DEAR SIR/MADAM, iam apply rasan card green colour but i receve white colour card where change my card?

சையது அபுதாஹுர்
May 5, 2015 at 12:12 pm

அய்யா வணக்கம் குடும்ப அட்டை 2010தில் விண்ணப்பித்தேன் மீண்டும் 2012ல் விண்ணப்பித்தேன் எந்த பதிலும் இல்லை வழி கூருங்கள்

நவீன் ராஜ்
July 27, 2015 at 4:48 am

வணக்கம்
எனக்கு திருமணம் ஆகிவிட்டது வாவாடகை வீட்டில் வசித்து வருகிறேன் தனி குடும்ப அட்டை பெறுவதற்கு என் பெயரை பழைய குடும்ப அட்டை இருந்து நீக்கி விட்டேன்.
ஆனால் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் என் பெயரை நீக்கிய பழைய குகுடும்ப அட்டை வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆனால் என்னுடைய குடும்ப பிரச்சினை காரணமாக அம்மா அப்பா தர முடியாது என்று கூறி விட்டார்கள். இதனால் குடும்பம் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளது

naveenraj. p
September 13, 2015 at 1:17 am

ஐயா வணக்கம்
புதிய குடும்ப அட்டை வேண்டி என்னுடை பெயர் மற்றும் என்னுடைய மனைவி பெயரை பழைய குடும்ப அட்டை இருந்து நீக்கி விட்டேன். பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் எங்கள் இருவருடையதும் துலைந்துவிட்டது அச்சான்று இல்லாமல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளது இத்தகவலை தெரிவிப்பதற்கு கரூ‌ர் மாவட்டம் மண்மங்களம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரி இல்லை கடந்த மூன்று வாரங்கள் கழித்து தான் இந்த தகவலை கூறினார்.வாரம் இரண்டு நாட்கள் மட்டும் தான் வருகிறார் செவ்வாய் மற்றும் புதன்கிழமை. பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் இல்லை நான் எப்படி புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்பது?

Leave a Reply

%d bloggers like this: