ஹைதராபாத் குண்டுவெடிப்பு – கேள்வி பதில்

Wednesday, March 27th, 2013 @ 10:03PM

Photo of Dr. Jayaprakash Narayan

ஹைதராபாத் குண்டுவெடிப்பு பற்றி லோக் சத்தா தேசியத்தலைவர் ஜெயப்ரகாஷ் நாராயணிடம் மக்கள் கேட்ட கேள்விகளும் அவரது பதில்களும்.

குண்டு வெடிப்பிற்குக் காரணம் என்ன?

நம் நாட்டில் சமூக வேறுபாடுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக தீவிரவாதிகள் இது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். சிக்கலான வரலாறு கொண்ட பன்முக சமூகத்தில் குழப்பங்களை விளைவிக்க சில நேரங்களில் எளிதாக உள்ளது. நாம் எல்லா நேரங்களிலும் நமது தேசிய ஒற்றுமையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் கோபத்தை ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பயன்படுத்தி சமூக சீர்கேடுகளை விளைவிக்கும் தீவிரவாதிகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மத்திய அரசின் பங்கும் பொறுப்பும் என்ன?

மத்திய அரசின் புலனாய்வுத் தகவல் சேகரிப்பு மற்றும் தடுப்பு பிரிவு முக்கியமானது. பிப்ரவரி 22-ம் தேதி லண்டன் காவல் துறையினர் கண்கானிப்பு, தகவல், ஒருங்கிணைந்த தொழில் முறைகளின் விளைவாக ஒரு பெரிய தாக்குதலை தடுக்க முடிந்தது மட்டுமல்லாமல் குற்றவாளிகளை விசாரனை செய்து எளிதில் தண்டனைகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. நம் நாட்டிலோ தண்டனை என்பது இறுதியானதாக இருக்கிறது. மத்தியஅரசு மாநிலங்களுக்கு பொருந்தும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு ஒருங்கிணப்பை மேற்கொள்வதோ அல்லது அதிகாரம் வாய்ந்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்திற்கு மக்கள் எதிற்ப்பு தெரிவிப்பதோ இல்லாமல், அநியாயங்களை தவிர்க்க உதவும் சட்டங்களை மத்திய அரசு இயற்ற வேண்டும்.

பொது மக்களின் பங்கும் பொறுப்பும் என்ன?

நமது குடிமக்கள் மிகச் சிறப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் குண்டு வெடிப்பு இடங்களை சுற்றி மக்கள் சேர்கிறார்கள். இது மேலும் தாக்குதல்களின் ஆபத்தை அதிகரிக்கவும் நிவாரண மற்றும் விசாரனைக்கு தடையாகவும் இருக்கிறது. அரசும் காவல் துறையும் குடிமக்களையே சமூகத்தின் காவலாளிகளாக மாற்ற வேண்டும். நாம் கவனமான நடவடிக்கைகளாலும் நன்கு செயல்படக்கூடிய நிறுவனங்கள், தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

பொறியியலும் தகவல் தொழில் நுட்பமும்?

இந்தியாவில் பொறியியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல இடங்களில் வெடி குண்டுகளைக்கண்டு பிடித்து செயலிழக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால் உண்மையாகவே சமூகத்தைப் பாதுகாக வேண்டுமானால் நாம் சமூகம் சார்ந்த பயிற்சியும் பலம் வாய்ந்த உபகரணங்களையும் சட்டதிட்டங்களையும் நம் காவல் துறையினருக்கு தர வேண்டும். மக்களிடம் தீவிரவாதம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டு எளிய முன்னெச்சரிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

சுதந்திரமும் தேசிய பாதுகாப்பும்?

ஒரு ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு முக்கிய நகரமும் இலக்காக இருக்கிறது. சீனா போன்ற வலுவான சர்வாதிகார நாட்டில்தான் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக பார்க்கப்படவில்லை. ஆனால் நோயிலிருந்து தப்பிக்க சுதந்திரம் இழத்தல் கொடூரமானது. நமக்கு சுதந்திரமும் பாதுகாப்பும் வேண்டும். ஒன்றை இழந்து மற்றொன்றை பெறக்கூடாது. எனவே ஜனநாயக எல்லைக்குள் நாம் பயங்கரவாதத்தை எதிர்த்துப்போராட நாம் நம் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

காவல் துறையின் குறைபாடுகளும் சீர்திருத்தமும்

நம் நாட்டில் சுமார் 1லட்சம் பேருக்கு 110 காவல்துறையினர் உள்ளனர். பல நாடுகளில் அந்த எண் 250 ஆக உள்ளது. இந்த குறைந்த காவலர்களில் பலர் வி.ஐ.பி பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றனர்.

மீதமுள்ளவர்கள் சுமாராக பயிற்சி பெற்றவர்களாகவும் குறைந்தபட்ச ஆயுதங்களுடன் இருப்பவர்கள் மட்டுமே. இந்த நிலையை மாற்ற வேண்டும். உதாரணமாக தில்சுக் பகுதியில் 2 சி.சி.டி.வி காமிராக்கள் செயல் பாட்டில் இல்லை. ஒன்று செயலிழந்து விட்டது, மற்றொன்றில் நினைவு வட்டு செயலில் இல்லை. இரண்டுமே குண்டு தாக்குதலுக்குள்ளான இடங்களில் இருக்கும் CCTV காமிராக்கள். மேலும் டெல்லி காவல்துறையினரின் கண்டுபிடிப்புகளை ஹைதராபாத் காவல்துறையினரிடம் பகிர்ந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை. அதன் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. சரியான கண்காணிப்பு மற்றும் CCTV கண்காணிப்பு மூலம் இந்த குண்டு வெடிப்பை தடுத்திருக்கலாம். ஒருங்கிணைப்பும் உறுதியான நடவடிக்கைகளும், தொழில் முறை பயிற்சி, போதுமான வளங்கள், உபகரணங்கள்,தீவிர விசாரணை, அதிக ஊக்கம் இருந்தால் நம் இலக்குகளை அடையலாம். ஆனால் வாக்கு வங்கி அரசியல், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அரசியல் சட்டவிரோதமான செயல்களினாலும் காவல்துறையினரின் ஒழுக்கம், திறமை, மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் குணம் குறைந்து விடுகிறது.

நீண்டகாலத் தீர்வு என்ன?

எதிர்கால வாழ்க்கையை நன்கு அமைத்து, தீவிரவாத செயல்களால் இந்திய சமூகத்தை எவ்விதத்திலும் வலுவற்றதாக மாற்ற முடியாது என்பதை உலகுக்கு தெரிவிக்கவேண்டும். பொருளாதாரம், தேசியபாதுகாப்பு உள் கட்டமைப்பு, மின்சக்தி, மன உறுதி, தேசிய சக்தி ஆகியவற்றைப் பெருக்கினாலே தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுவிடும். எனவே தேச ஒற்றுமை, வலிமை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை அதிமுக்கியமானவை. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அசாதாரமான சவால்களை எதிர் கொள்ள சாதாரண குற்றவியல் சட்டங்கள் போதாது. பாதுகாப்பு திறன் வாய்ந்த வலுவான பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் நம் நாட்டிற்கு தேவை. குற்றம் சுமத்தப்பட்டவரின் மனித உரிமையைக் காப்பது நம் கடமை, அதே நேரத்தில் தேசிய அச்சுறுத்தல்களிலும், பொதுமக்களில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிலும் சமமான அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

மூலம்: http://ibnlive.in.com/chat/dr-jayaprakash-narayan/why-is-hyderabad-being-targeted-repeatedly-over-the-last-one-decade/1548.html

தொகுப்பு : கண்ணன்

Categories: Article, March 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: