காவல்துறை சீர்திருத்தங்கள் – பகுதி 2

Thursday, March 28th, 2013 @ 8:26AM

சென்ற வாரம் காவல்துறை பற்றி பொதுமக்களின் பார்வையும், காவல்துறையின் மறுபக்கத்தையும் பார்த்தோம்.
Police reforms

உச்சி வெயில் ரோட்டில நாங்க
கருவாடா காயிறோம்…
போலீஸ் தொப்பிக்குள்ள வேர்வையில
தொப்பரையா நெனயிறோம்…
போலீஸ்

காவல்துறையின் மறுபக்கத்தை சமீபத்தில் வெளியான இந்த திரைப்பட பாடல் வரிகள் அழகாக பிரதிபலிக்கிறது. “ஆந்த்ரோபோமெட்ரி” என்னும் மனிதனை அளவிடும் அமைப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியது நாம்தான் (வங்காளம் – 1892) என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதேபோல் உலகின் முதல் கைரேகை செயலகத்தை நிறுவியதும் நாம்தான் (கொல்கத்தா – 1897). ஆனால் இன்றைய நிலையோ பரிதாபத்திற்குரியதாய் உள்ளது. நம்மிடம் போதிய தடவியல் ஆய்வகம் இல்லை. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை நாம் பயன்படுத்துவதில்லை. காவல்துறை மற்றும் துப்பறியும் பயிற்சி பள்ளிகள் காவல்துறையின் தேவைகளுக்கேற்ப வளரவில்லை. இன்னும் பழைய பயிற்சி முறைகளையே நாம் கையாளுகிறோம்.

ஆணையங்கள் மேலும் ஆணையங்கள்

கேரள காவல் ஆணைக்குழு (1959), உத்தர பிரதேச காவல் ஆணைக்குழு (1960), பீகார் காவல் ஆணைக்குழு(1961), மேற்கு வங்காள காவல் ஆணைக்குழு (1960-61), பஞ்சாப் காவல் ஆணைக்குழு (1961-62) பிரிட்டிஷ் இந்தியா காவல் ஆணைக்குழுக்கள் (1860 மற்றும் 1902) – மதராஸ் காவல் விதி, தேசிய காவல் ஆணைக்குழு (1977-81), நீதி ஆணைக்குழு அறிக்கைகள், சிறைத்துறை சீர்திருத்தங்கள் குறித்த அனைத்திந்திய ஆணைக்குழு (1980-83), தேசிய மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைகள், ஜூலியோ ரிபெய்ரோ ஆணைக்குழு (1988), பத்மனாபய்யா ஆணைக்குழுவின் காவல்துறை சீர்திருத்தங்கள் (2000), குற்றவியல் நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்த மாலிமாத் ஆணைக்குழு சீர்திருத்தங்கள் (2003), 2வது நிர்வாக சீர்த்திருத்த ஆணைக்குழு (2005), வகுப்புவாத சண்டைக்களுக்கான விசாரணை ஆணைக்குழு, பிரகாஷ் சிங் மற்றும் இந்திய அரசிற்கு நடந்த வழக்கின் முடிவில் உருவான பரிந்துரைகள், மாதிரி காவல் விதி (2006)….

மேலும் சொல்வது நமக்கு சங்கடங்களையே உருவாக்கும் என்பதால் இத்தோடு முடிக்கிறேன். இவ்வளவு சீர்த்திருத்தங்கள் இருந்தும் இன்னும் ஏன் இவையாவும் ஏட்டளவில் மட்டும் உள்ளது – இதற்கு பதில்தான் என்ன? ராட் பிளாகோசெவிச் (இது பதில் அல்ல. இது ஒரு சம்பவம்). இந்த பெயர் எங்கோ கேட்டது போல் உள்ளதா? அமெரிக்க ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சியின் முக்கிய பிரதிநிதி. 2008 ஆம் ஆண்டில் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனதால் காலியான அவரின் செனட் உறுப்பினர் பதிவியை ஏலத்தில் விற்க முயன்றார் ராட். கைதானார். அவரின் மீது மொத்தம் 23 குற்றங்கள் சுமத்தப்பட்டு 17 நிரூபணமானது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை – பதவி பறிப்பு, 14 ஆண்டுகால சிறை, இனி அவரால் பொது வாழ்க்கையில் ஈடுபடவே முடியாத ஆணை. ஏதேனும் ஒன்றல்ல, மூன்றும்.

இதே போன்றதொரு வழக்கு நம் நாட்டில் என்னவாகும்? அன்று ‘லைசென்ஸ் ராஜ்’ முறையில் நடந்து வந்த ஊழல் இன்று தன் இயல்பில் மாறியுள்ளதே தவிர வடிவம் அப்படியேதான் உள்ளது. இதற்கும் இது போன்ற பல பிரச்சனைகளுக்கும் ஆணி வேர் – தற்பொழுது இருக்கும் ‘அரசியல் கலாச்சாரம்’, அதையொட்டி தேர்தல் முறை – முறைகேடான பணத்திற்கு வற்றாத தேவையாக இன்றைய தேர்தல் முறை உள்ளது. இன்று இந்தியாவை ஆளும் மொத்த 4896 ஆட்சியாளர்களில் 1488 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. காவல்துறையை கட்டுபடுத்துவதற்கே இவர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து போட்டியிடுகிறார்கள். இந்த குற்றப் பிண்ணனி கொண்ட அரசியல், ஊழல், தேர்தல் அரசியல் இவை யாவும் சேர்ந்து காவல்துறையை பதம் பார்க்கிறது. எங்கிருந்து வரும் சீர்திருத்தங்கள்?

தேவையான சீர்த்திருத்தங்கள்

  • அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்பது முதல் படி அதைத் தவிர காவல்துறையை மக்கள் சேவைக்கான துறையாக மாற்ற வேண்டிய சில சீர்த்திருத்தங்கள்.
  • சுதந்திரமான அரசியலமைப்புக்கு கட்டுப்பட்ட, அரசியல் குறுக்கீடற்ற, மற்ற காவல் துறைகளிலிருந்து வேறுபாடு கொண்ட தனிப் பிரிவாக உருவாக்கப்பட்ட சுதந்திரமான குற்ற புலனாய்வு (Independent Crime Investigatton)
  • உள்ளூர் காவல் (Local Policing) – அந்தந்த பகுதிகளில் நடைபெறும் சிறிய அளவிலான வேலைகளுக்கு – உதாரணமாக போக்குவரத்து கட்டுப்பாடு. உள்ளூர் ரோந்து, சிறிய அளவிலான குற்றங்கள் ஆகியவற்றை உள்ளூரிலேயே தீர்க்கும், அங்கிருக்கும் ஊராட்சிக்கோ அல்லது உள்ளூர் அரசாங்கத்திற்கோ (நகராட்சிக்கோ) கட்டுப்படவர்களாய் உள்ளூர் காவல். இந்த உள்ளூர் காவல் உள்ளூர் நீதிமன்றத்தோடு இணைந்திருக்க வேண்டும். (உள்ளூர் நீதிமன்றம் குறித்து நீதித்துறை சீர்திருத்தங்களில் வரும் வாரங்களில் காணலாம்).
  • தேச சொத்துக்களை பாதுகாத்தல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல், முக்கியஸ்தர்களை பாதுகாத்தல் ஆகிய முக்கிய பொறுப்புகளுக்கு அரசியல் மேற்பார்வை நிச்சயம் தேவைப்படும். இந்த பி¡¢வு காவல்துறை எக்காரணம் கொண்டும் குற்ற புலனாய்விற்கு குறிக்கீடாக அமையாமல் இருக்க வேண்டும்.
  • கான்ஸ்டபிளாக இருக்கும் காவலருக்கு தேவையான உ¡¢மைகள் வழங்கி, அவர்களுக்கும் தேவையான திறங்களை வளர்த்து முக்கியமான பொறுப்புகள் வழங்க வேண்டும். ஆர்டர்லி முறையை ஒழித்து அவர்களுக்கும் மா¢யாதை தந்து அவர்களின் கண்ணியம் காக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
  • எந்த ஒரு புகார் வந்தாலும் நிச்சயம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • அனைத்து குற்ற விசாரணைகளும் நிச்சயம் காட்சி பதிவு செய்யப்பட வேண்டும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் தடவியல் ஆய்வகம் உருவாக்க வேண்டும்.

மேற்சொன்ன சீர்த்திருத்தங்கள் யாவும் மேம்போக்காக செய்ய முற்பட்டால் நாம் மீண்டும் படு குழியில்தான் விழுவோம். இந்த சீர்த்திருத்தங்கள் யாவும் காவல்துறையின் அடிப்படை கட்டமைப்பில் இருந்து துவங்கப்பட வேண்டிய ஒன்று. இந்த சீர்த்திருத்தங்கள் காவல்துறைக்கு. இந்த சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டிய அரசியல் துறைக்கு? அடுத்த வாரம். சீர்திருத்தங்கள் தொடரும்.

– தெ.ஜெகதீஸ்வரன்

Categories: Article, March 2013, Whistle

1 Comment to "காவல்துறை சீர்திருத்தங்கள் - பகுதி 2" add comment
Muthubaarathi.SA.
April 1, 2013 at 10:17 pm

Sir,

During the Tirupur meeting i came to know about the policy making in all areas. About Police Department we need to alter the entire structure as it is existing now, but anyway whatever the ideas provided in the above definitely appreciable. Let us wait for the time to come….till that we must walk towards our aim with confident…..In your leadership Tamil Nadu have a chance to cherish. We are waiting for that and also try our level best to support the team.

Leave a Reply

%d bloggers like this: