அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

Tuesday, April 23rd, 2013 @ 7:39AM

ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை இந்த மாதம் பார்ப்போம்.

அரசு ஆணை எண்: 114

அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.

  • அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் உடனே வாங்கி கொண்டதற்கான ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) மனுதாரருக்கு கொடுக்க வேண்டும்.
  • அரசு அலுவலர் கொடுக்கும் ஏற்பு ரசீதில் மனுதாரரின் பெயர், முகவரி, யாருக்கு என்ன விசயமாக அனுப்பபட்டுள்ளது என்ற விவரமும், கடிதம் வாங்கும் அலுவலரின் கையெழுத்தும், அவர் வகிக்கும் பதவியின் பெயரும், அலுவலக முத்திரையும் தேதியுடன் இருக்க வேண்டும்.
  • தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும்.
  • அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
  • கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தின்ங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது. [அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006(5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள். இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும். அரசு அலுவலகங்களில் அரசாணைப்படி ஏற்பு ரசீது கொடுக்க மறுத்தால் லோக் சத்தா கட்சியை தொடர்பு கொள்ளவும், உங்களுக்கு உதவ தயாராக உள்ளது.

Categories: April 2013, Article, Whistle
Tags: ,

1 Comment to "அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்" add comment
chandrasekaran.b
December 10, 2013 at 5:11 pm

good jop

Leave a Reply

%d bloggers like this: