நம் நாட்டின் மக்களாட்சி ஏழைகளுக்கு வேலை செய்கிறதா?

Monday, April 22nd, 2013 @ 11:36PM

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏழை வீட்டில் பிறந்த ஒருவனுக்கு சரியான கல்வி இருப்பதில்லை; சுகாதாரம், மருத்துவம் கேள்விக்குறியாக உள்ளது; நீதி தாமதிக்கபடுகிறது. பிறகு எப்படி அவர்களுக்கு மக்களாட்சி வேலை செய்யும்? நமது அரசு அதன் அடிப்படை கடமைகளை விடுத்து தேவையில்லாத வேலைகளை எடுத்து செய்வதின் காரணமாக, வரிகள் ஏழைகளை சென்றடையாமல் வீணே செலவாகின்றது.

இந்தியாவில் பிறக்கும் 80% குழந்தைக்கு தன்னுடைய திறமையை பூர்த்தி செய்யும் வாய்ப்பை, அதன் பிறப்பு முடிவு செய்வது வேதனையான விசயமாகும்

ஏன் வரிகள் சரியாக செலவிடப்படுவதில்லை என்கிறீர்கள்?

வளர்ந்த/பிற வளரும் நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% முதல் 8% வரை சுகாதாரத்திற்கும் 5% கல்விக்கும் செலவிடுகின்றன. நம் நாட்டில் இவை முறையே 0.9% மற்றும் 3.2% ஆகும். நமது அரசு தேவையின்றி பலரை வேலைக்கு அமர்த்தியுள்ளது; வீணே சம்பளமும் அளிக்கிறது. ஆனால் அவசியம் தேவைப்படும் பணிகளான ஆசிரியர், கிராம சுகாதார அலுவலர், நீதிபதிகள் போன்றவற்றில் பெரும் குறைபாடு காணப்படுகின்றது.

கல்வியினை எவ்வாறு மேம்படுத்துவது?

முதலில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நம்மால் அதற்கு செலவிட இயலும். ஆசிரியர் தரம் உயர உயர்கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். அது நடக்கும் வரை குறைந்த கால நடவடிக்கையாக அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி மேற்பார்வை முறைகள் மாற்றியமைக்கப்பட்டு, ஆசிரியர்களின் செயல்பாடுகள் சோதிக்கப்பட வேண்டும்.

இதற்காக நாம் ஒருமுறை செலவாக நமது அரசாங்கம் 10 நாள் செலவிடும் தொகை போதும் ( ஏறக்குறைய 50,000 கோடி ). மேலும் ஆண்டு தோறும் , 8 நாள் அரசின் செலவிடும் தொகையை (40,000 கோடி) தேவை படும். இதன் மூலன் கிடைக்கும் சமூக மற்றும் பொருளாதார நன்மையை பார்க்கும்பொழுது இது மிகவும் குறைவே

இதுபோல மற்ற துறைகளை சரிசெய்வதற்கு என்ன தேவைப்படும்?

அனைவருக்கும் சுகாதாரமும் அணைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதியும் உறுதி செய்ய கூடுதலாக முறையே 5,6 நாள் அரசின் செலவிடும் தொகை தேவைப்படும் . இந்த எடுத்துக்காட்டுக்கள் நமது நிதி ஆதாரங்கள் குறைவாக இருப்பதை உணர்த்தினாலும், இருக்கும் நிதி ஆதாரங்கள் சரியாக செலவு செய்யப்படுவது இல்லை. இருப்பதை சரியாக செலவு செய்தாலே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் காணமுடியும் .

என்று இந்த மண்ணில் பிறக்கும் அணைத்து குழந்தைகளும் தனது திறமை முழுமையாக பூர்த்தி செய்ய வாய்ப்பு கிடைகின்றதோ , அன்றுதான் நமது மக்களாட்சி அனைவரையும் சென்று சேர்ந்திருக்கும்.

– அகிலன்

Categories: April 2013, Article, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: