மாநில தகவல் ஆணையத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Wednesday, April 3rd, 2013 @ 9:05PM

தமிழக அரசின் திட்டமான அரசு கேபிள் டிவி-யில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தேவையான தகவல்களை தரக்கோரி லோக் சத்தா கட்சியின் மாவட்ட செயலாளர் திரு பழனிகுமார் அவர்கள் ‘மாநில தகவல் ஆணையத்தின்’ மேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

chennai-high-courtமுன்னதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தும் அரசு கேபிள் டிவி சார்பில் எந்த ஒரு பதிலும் வராததால் தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்யப்பட்டது.  அதற்கு ஆறு மாதங்களாகியும் எந்த தகவலும் தரப்படாததால் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தகவல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தகவல் உரிமை சட்டத்தின் படி விவரங்கள் கோரிய விண்ணப்பம்: http://bit.ly/XMUyBB

அரசு கேபிள் கட்டண விவரம், ஒப்பந்தக்காரர் விவரம், புகார் கொடுக்கும் முகவரி, இது வரை கொடுக்கப்பட்ட புகார்களின் விவரம் மற்றும் அந்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விவரங்கள்: http://bit.ly/14EChJx

 

Categories: Court Cases, Press Releases
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: