மயிலாப்பூர் மதுக்கடை முற்றுகை/போராட்டம் – லோக் சத்தா கட்சி ஆதரவு

Thursday, April 25th, 2013 @ 5:53PM

கோரிக்கை: பொது மக்களுக்கு தொல்லை தரும் விதத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் ஆகியவற்றை அகற்றக்கோரியும், காவல்துறையின் யதேச்சாதிகாரப் போக்கை கண்டித்தும்..

தேதி/நேரம்: 26 ஏப்ரல் 2013, வெள்ளிகிழமை காலை 10 மணி.

இடம்: டாஸ்மாக் மதுக்கடை முன்பாக. No 916, PNK தோட்டம் (முண்டகண்ணியம்மன் கோவில் MRTS ரயில் நிலையம் பின்புறம்), வித்யா மந்திர் பள்ளி அருகில், மயிலாப்பூர், சென்னை.

போராட்ட காரணம்: PNK தோட்டம், மயிலாப்பூரில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொது மக்கள் சார்பில் வெகு நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இரவில் குடிகாரர்கள் தெருவோரத்திலேயே குடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பது, அங்கேயே வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அந்த பகுதி மக்கள் அமைதியான வாழ்கை நடத்த முடியாமல் இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு நேரத்தில் அந்த பகுதியே கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருட்டியபின் அந்த பொது இடமே பார் போல காட்சியளிக்கிறது. சமூக விரோதிகள் கூடவும் வசதியாக அமைகிறது.

சில நாட்களுக்கு முன் டாஸ்மாக்கிற்கு வந்த லாரி தெருவை மறைத்து நின்றதை நகர்த்த சொன்ன பொது மக்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த காவலர்கள் பொதுமக்களை தாக்கி டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். காவல்துறையின் இந்த போக்கு டாஸ்மாக் ஊழியர்களுககு மேலும் உறுதி அளித்து அவர்கள் செய்வது சரி என்ற எண்ணத்தை அளிக்கிறது.

பொது மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள, பொது மக்களை அச்சுறுத்துவோர்களின் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள ஆகிய நியாயமான காரணங்களுக்காக போராட்டம் நடத்துகிறார்கள்.

லோக் சத்தா கட்சி போராட்டம் செய்யும் பொது மக்களுக்கு ஆதரவு அளிக்கிறது. டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்யும் என தெரிவித்துக்கொள்கிறது.

Categories: Activities, Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: