வரி விளையாட்டு

Tuesday, April 23rd, 2013 @ 8:03AM

taxநாம் எல்லோரும் மிகவும் ரசித்து கேட்ட வசனம் தான்!

“எதற்கு கேட்கிறாய் கிஸ்தி?” என்று சிவாஜி வீர வசனம் முழங்கும் போது, நம் உடலில் புல்லரிப்பு ஏற்படத்தான் செய்தது. யாரும் மறுக்கமுடியாது.

வரிகள் என்பவை மக்கள் நலனுக்காக மக்களால் சந்தோஷமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று. மக்கள் என்று வரிகளை சரியாக செலுத்த தவறிவிடுகிறர்களோ, அப்பொழுது அரசு தன் கடமையில் இருந்து தவறி விட்டதாக அர்த்தம். அரசு மக்களுடைய அரசாகவும், மக்களுக்கு செய்ய வேண்டியனவற்றை ஒழுங்காகவும் செய்யுமேஆனால், மக்கள் வரி செலுத்துவதை சந்தோஷமாகச் செய்வார்கள். அப்படி செய்யாமல், வரிகளை சட்டத்தின் உதவியுடன், வசூலித்தால் அது கொடுங்கோல் ஆட்சியாகி விடுகிறது.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில், வரிகளை ஒழுங்குப்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.

வித விதமாக உள்ள வரிகளை இணைத்து, ஒன்றாக்கி, சீர் அமைத்து மக்களுக்கு ஏதுவாக செய்கிறார்கள். உதாரணமாக, இந்திய அரசு, விற்பனை வரி, சேவை வரி, சுங்க தீர்வை ஆகிய இவைகளை இணைத்து ஒன்றாக்கி, GST என்று ஒரே வரியை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறர்கள். சீனா போன்று விரைவாக முன்னேறும் நாடுகளில், வருமான வரியைக் கூட விற்பனை வரியுடன் இணைத்து விட்டார்கள்.

இது இப்படி இருக்க, நமது கோவை போன்ற நகரங்களில் நான்கு அல்லது ஐந்து விதமான வரிகள் விதித்து இருக்கிறர்கள். ஒரே வரியில் வேண்டிய பணத்தை வசூலித்துக் கொண்டால் எல்லோருக்குமே அது சுலபமாக போகும். எப்படி என்று பார்ப்போம்.

மாநகராட்சிகளில் சொத்து வரி, தொழில் வரி, கடைகளுக்கான வரி, தண்ணீர் வரி, கழிவு வரி என்று பல விதமான வரிகள் விதிக்கப் படுகின்றன. இத்தனை வரிகள் இருப்பதனால், அவற்றை தவறாமல் வசூலிக்க முடிவதில்லை. தொழில் வரியை முழுமையாக வசூலிக்க முடிவதில்லை. கடைகளூக்கான வரியும் சரியாக வசூலிக்க படுகிறதா என்பது கேள்விக்குறியே.

இவைகளை வசூலிக்க ஆட்கள் தேவை. ஓவ்ஒன்றையும் முறையாக பார்த்து, சரியான வரியை வசூலிக்க வேண்டும். தவறாமல் வசூலிப்பது என்பதும் மிக முக்கியமானது.

மாறுபட்ட பல வரிகளை இணைத்து ஒரு வரியாக செய்தால், வசூலிப்பதற்கும் சுலபம், கட்டுகின்ற மக்களுக்கும் சுலபமாக இருக்கும்! உதாரணமாக இந்த வரிகளை எல்லாம் இணைத்து, ஒரு உபயோக படுத்தாலுக்கான வரியாக மாற்றினால் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கும்.

இந்த வரிகளை தண்ணீருக்கான வரியாக மட்டும் மாற்றினால், இது எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

தண்ணீர் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. தண்ணீர், கோவை போன்ற பெரு நகரங்களில், தட்டு பாடாகவே உள்ளது. அதற்கான வரியை உயர்த்தினால், மக்கள் தண்ணீரை குறைவாக பயன்படுத்துவார்கள், சிக்கனமாக கையாள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் ஒரு குடும்பம் தண்ணீரை அதிகமாக உபயோகப்ப்டுத்துமானால், அது பெரிதானதாக இருக்கும். பணம் படைத்தவர்கள் இப்பொழுதும் அதிகமாகவே வரி செலுத்துவார்கள். லாரியில் தண்ணீர் பிடிக்கும் பாமர மக்கள் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் அதிகம் உபயோகப்படுத்துபவர்கள் கண்டிப்பாக கழிவு நீரும் அதிகமாக வெளியேற்றுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கான வரியையும் தண்ணீர் வரியிலேயே இணைத்துவிட்டால், இந்த காரியம் சுலபமாக முடியும். தண்ணீரை அடிப்படையாக கொண்டு வரி வசூலித்தால், அத்தனை வரிகளையும் இதன் உள்ளேயே அடைக்க முடியும்.எல்லோருக்கும் உபயோகப் படும்படியான இந்த வரி வசூலிப்பு தான் சிறப்பானதாக இருக்கும்.

– ஷாந்தகுமார்

Categories: April 2013, Article, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: