லோக் சத்தா கட்சியின் திருப்பூர் பயணம்

Thursday, April 4th, 2013 @ 8:39AM

லோக் சத்தா கட்சியின் மாநிலக் குழு கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திருப்பூர் பயணித்தது. மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் திருப்பூர் மாவட்ட அணியினரைச் சந்திக்கவும், அவர்களது செயல்பாடுகளில் கலந்துகொள்ளவும் இந்தப் பயணம்.

மார்ச் 30 : சனிக்கிழமை

சனிக்கிழமை காலை 7.00 மணி அளவில் சென்னையிலிருந்து மாநில நிர்வாகிகள் திருப்பூருக்கு வருகை தந்தனர். காலை உணவிற்குப் பின்னர் 2 நாள் செயல்பாடுகளில் முதல் நிகழ்வாக கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று அங்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூரிலுள்ள 2 பெரிய கேஸ் ஏஜென்சி நிறுவனங்களில் நடைபெற்றது. மேலும் அதே இடங்களில் சுமார் 5 நபர்களுக்கு உரிய விலையில் கேஸ் இணைப்பு பெற்றுத் தரப்பட்டது.

பின்னர் திருப்பூர் புதிய பஸ்நிலையம் மற்றும் பழைய பஸ்நிலையங்களில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பின்னர் மதிய உணவுக்குப் பின்னர் திருப்பூர் அரசு தலைமை மருத்துமனைக்குச் சென்று அங்குள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் கொடுக்கப்பட்டது. அங்கேயே இலஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு தலைமை மருத்துவமனை செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்திகளை அங்குள்ள நோயாளிகள் மனக்கொதிப்புடன் வெளிப்படுத்தினர். குறிப்பாக பெண்கள் பிரசவவார்டு பகுதியில் நடக்கும் அநீதிகள் சொல்லி மாளாது.

Close
30-Mar-2013 17:07
Close
30-Mar-2013 16:49
Close
30-Mar-2013 16:49
 
Close
30-Mar-2013 16:49
Close
30-Mar-2013 16:50
Close
30-Mar-2013 16:54
 
Close
30-Mar-2013 16:54
Close
30-Mar-2013 16:56
Close
30-Mar-2013 16:57
 
Close
30-Mar-2013 16:57
Close
30-Mar-2013 17:02
Close
30-Mar-2013 17:02
 
Close
30-Mar-2013 17:02
Close
30-Mar-2013 17:08
Close
30-Mar-2013 17:08
 
Close
30-Mar-2013 17:08
Close
30-Mar-2013 17:09
Close
30-Mar-2013 17:10
 

நாங்கள் பழங்கள் வழங்கும்போது ஏதாவது குறைகள் இருக்கிறதா என கேட்டதுதான் தாமதம்… அடுக்கடுக்காய் குறைகளை அள்ளிவீசினார்கள். நேரிடையாகப் பார்க்கும்போதும் அவர்களின் உள்ளக்குமுறல்கள் உண்மையாகத்தான் இருந்தது. பெண்கள் கழிவறை செல்லும் பகுதி தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு உணவுப்பொருட்கள் சிந்திக்கிடந்தது. மேலும் அளவுக்கதிகமாக உள்நோயாளிகளை அனுமதித்து அவர்களுக்கு இடமின்றி, குழந்தை பிறந்தாலும் அவர்களை குழந்தையுடன் தரையிலேயே படுக்க வைத்துள்ளனர். பெரும்பாலான மின்விசிறிகள் இயங்குவதில்லை எனத் தெரிந்தது.

இது குறித்து நிர்வாக அலுவலகம் சென்று சொல்லலாம் என்று சென்றால் அங்கே அதிர்ச்சிதான் காத்திருந்தது. கணக்குப்பிரிவு மற்றும் பண்டகப்பிரிவு என்று போட்டிருந்த திறந்த அறைக்குள் நுழைந்தால் அங்கே ஊழியர்கள் யாருமின்றி பல விளக்குகள் எரிந்துகொண்டும் 5 மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தது. பிரசவ வார்டிலோ பிரசவம் ஆன பெண்களை குழந்தையுடன் தரையில் படுக்க வைத்து மின்விசிறியும் ஓடாமல் உடனடி தேவைகளை கவனிக்காமல் மெதுவாக வந்தே கவனிக்கின்றனர். அதுவும் அவர்களை ‘கவனித்தால்’தான் என்றும் அனைத்து தாய்மார்களும் ஒருமித்த கருத்தாக தெரிவித்தனர். குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கண்ணில் காட்டவே 500 ரூபாய் தரணுமாம். ஆண் குழந்தைக்கு ஒரு கட்டணம், பெண் குழந்தைக்கு ஒரு கட்டணம் என இலஞ்சமாக அவர்கள் கேட்டுப் பெறுகின்றனர். தராதவர்களுக்கு அவர்களின் கவனிப்பே வேறுதான். அதனால் யாரும் தரமறுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஏன் பிறந்த குழந்தையின் உயிரோடு விளையாடவேண்டும் என அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால், நடந்த கொடுமைகளை நேரில் கண்டு கண்ணீர் வராததுதான் மிச்சம். அவர்களுக்கெல்லாம் இம்மாதிரி பணம் தரவேண்டியதில்லை என்றும், நர்ஸ், டாக்டர் மற்றும் பிற ஊழியர்களுக்கு அரசு சம்பளம் தருகிறது அவர்களுக்கு இலஞ்சமாக பணம் கொடுத்து பிச்சைக்காரர்கள் ஆக்கிவிடாதீர்கள் என உரக்கச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். நோயாளிகளை பார்க்க அனுமதிக்கும் நேரங்களிலும் பல குளறுபடிகள் எனவும் தெரிந்தது. சமீபத்தில் 300 படுக்கைகள் கொண்ட பிரசவ வார்டு திறப்புவிழா கண்டும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. இருந்தாலும் இந்தப்பிரச்சனைக்கு உடனடி தீர்வை எட்ட இயலாது என்று கணத்த இதயத்தோடு வெளியே வந்தோம்.

தலைமை மருத்துவரை அல்லது உயர் அதிகாரிகளை பிறிதொரு நாளில் சந்திக்க முடிவு செய்து அந்த விழிப்புணர்வு பணியை நிறைவு செய்தோம். அவர்களுக்கு ஆறுதல்களைச் சொல்லி இதுகுறித்து மருத்துவமனை தலைமை நிர்வாகிகளுடன் பின்னர் தொடர்பு கொண்டு நிவாரணம் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.

மாலை 6 மணிக்கு மேல் திருப்பூர் காங்கயம் சாலை முதலிபாளையம் ஊரிலுள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் லோக் சத்தா கட்சி கிளை திறப்புவிழா நடைபெற்றது. அங்கு கட்சிக்கொடி ஏற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் லோக் சத்தா மாநிலத் தலைவர் திரு. ஜெகதீஸ்வரன் ஆற்றிய உரை:

இரவு 10 மணிக்கு மேல் இரவு உணவுக்குப் பின்னர் அடுத்த நாள் நிகழ்வுகள் குறித்து திட்டமிடலுக்குப் பின்னர் முதல்நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

மார்ச் 31 : ஞாயிறு

இரண்டாம் நாள் நிகழ்வுகள் (செயற்குழு மற்றும் பொதுக்குழு) திருப்பூர் இராயபுரம் பகுதியில் ‘விசில்’ பத்திரிக்கையின் திருப்பூர் ரிப்போர்டர் திரு.எஸ்ஏ. முத்துபாரதியின் இல்லத்தில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் இனிதே துவங்கியது.

காலை 10 மணிக்குத் துவங்கி மதியம் 1.30 வரை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மதிய உணவிற்குப் பின்னர் மாலை 3 மணிக்குத் துவங்கிய பொதுக்குழுக் கூட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றது. பின்னர் தேசிய கீதம் பாட கூட்டம் நிறைவுபெற்றது.

அனைவரும் இரவு உணவுக்குப் பின்னர் சென்னை, கோவை, பெங்களுரு என பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள் பிரியா விடைபெற்றனர்.

Categories: Activities, April 2013, Article, Whistle

1 Comment to "லோக் சத்தா கட்சியின் திருப்பூர் பயணம்" add comment
Thirusureshkumar
April 5, 2013 at 10:19 am

Really Hats off to all your service, yes the Environmental hygienic is most important to all, especially the new born baby and mother, Please raise it up with concern authority, We are here to help you.

I could understand we enormous support from people also, I mean to maintain the infrastructure and keep it clean etc..

For that we strict Officers and service minded people. All the best from my side.

Leave a Reply

%d bloggers like this: