இந்திய ஜனநாயகம் சாதித்தவையும் பாடங்களும்

Saturday, May 18th, 2013 @ 10:45AM

Emblem_of_Indiaபலர் இன்றைய ஊழல் மற்றும் மற்ற பல குறைகளை மட்டும் மனதில் கொண்டு, நமது ஜனநாயகத்தை மதிப்பிடுகின்றனர். இது குழந்தைத் தனமானது.
நாம் சாதித்தவை பல, அவற்றிலிருந்து அடிப்படைகளையும் பாடங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்பொழுதுதான் அந்த அடித்தளத்தின் மேல் நாம் மேலும் உருவாக்க முடியும்.
நமது சுதந்திர இந்தியாவின் தலைவர்கள், துணிந்து பல முடிவுகளை எடுத்தனர். முதல் நாள் முதலே அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் 207 ஆண்டுகளுக்கு பிறகே பெண்களுக்கு 1928 ஆம் ஆண்டு வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 189 ஆண்டுகளுக்கு பிறகே, கறுப்பினத்தவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
நாம் பல மொழிகளை கொண்ட ஒரு ஸ்திரமான நாட்டினை உருவாக்கி உள்ளோம். நமது அண்டை நாடான இலங்கை இரண்டு மொழிகளை சரியாக கையாளமால், பல உயிர்களை இழந்துள்ளது. கனடா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளும் இரண்டு மொழிகளுக்கே, அரசாங்கத்தில் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளன.
நமது பொருளாதர விழுக்காடு, 1948 ஆண்டு 2% இருந்தது அது 1991ஆண்டு 1% குறைந்தது. பின்பு அரசாங்க முட்டுக்கட்டைகளை நீக்கிய பிறகு இப்பொழுது 2.6% அடைந்துள்ளோம். 1947ல் 50% மேல இருந்த வறுமை இப்பொழுது 30% ஆக குறைந்துள்ளது. உணவு உற்பத்தியில் பற்றக்குறையில் ஆரம்பித்த நாம் 1990-ல் போதுமான சுய உற்பத்தியை அடைந்தோம்.
1947ல், தன்னிலை இல்லாமல் ஆரம்பித்த மாநில அரசுகள், இன்ற பெரும்பாலும் தன்னிலை அடைந்துள்ளன. இரண்டாம் உலகப் போருக்கு பின் விடுதலை அடைந்த நாடுகளில் மிக சிறந்த கூட்டுறவு ஆட்சி முறையை உருவாக்கி உள்ளது.
1991க்கு முன்பு, கம்பெனி ஆரம்பிப்பது முதல் வீடு கட்ட சிமெண்ட் வாங்குவது வரை அனைத்திற்கும் அரசு அனுமதி வேண்டும், அவை அனைத்திற்கும் லஞ்சம் வேண்டும். இப்பொழுது அந்த நிலைமை மாறி உள்ளது.
பாடங்கள்:
இவ்வளவு சாதித்தாலும் , நாம் நமது முழு திறமை பூர்த்தி செய்ய வில்லை. வாய்ப்புகள் இருந்தும், பயன்படுத்தாமல் உள்ளோம்.
ஊழல்: ஊழல் மற்றும் லஞ்சம் பல துறைகளில் குறைந்துள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு தொலைபேசி வாங்க லஞ்சம் தேவை பட்டது. இன்று தேவை இல்லை. இரயிலில் முன்பதிவு செய்ய தேவை பட்டது, இன்று தேவை இல்லை.
ஆக எங்கெல்லாம் வாடிக்கையாளருக்கு, வாய்ப்புகள் உள்ளதோ அல்லது தொழில்நுட்பங்கள் உள்ளதோ, அங்கெல்லாம் ஊழல் குறைந்துள்ளன. பொருளாதரத்தைப் பொறுத்த வரை, அரசு தலையீடு ஒழுங்குபடுத்தலோடு முடிந்துவிட வேண்டும்.
ஆனால், அரசு மட்டுமே செய்யமுடியும் நீதி மற்றும் காவல் துறைகளில் லஞ்சம் அதிகமாகி வருகின்றது. ஹாங் காங் போன்ற நாடுகள் நமக்கு இதற்கு பாடங்கள் வழங்குகின்றது. லோக் பால், லோக் ஆயுக்தா போன்ற தன்னாட்சி கொண்ட ஆணையங்களை அனைத்து மட்டத்திலும் உருவாக்க வேண்டும்.
தன்னிலை கொண்ட மாநிலங்களை உருவாக்கி உள்ள நாம், நமது உள்ளாட்சி அமைப்புகளை அதிகாரம் இல்லாமல் உருவாக்கி உள்ளோம். கூட்டாச்சி முறையின் அடுத்த கட்டத்தை நாம் அடைய வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு அருகில் உள்ள பொழுது நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.

ஒரு ஜனநாயகமாக நாம் நன்றாக செயல்படுள்ளோம். இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு தேவை நமது பலத்தினை அறிந்து கொள்வதே அன்றி அனைத்தையும் குறை கூறுவது அல்ல.
இந்தியா 2039ல் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக முடியும், நமது குறைகளை சரிசெய்யும் பட்சத்தில்!

Categories: Article, May 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: