அரசியல் கட்சிகள் தகவல் அறியும் சட்டத்தில் – லோக் சத்தா கட்சி வரவேற்கிறது

Tuesday, June 4th, 2013 @ 11:29PM

அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் சட்டத்தில் கொண்டுவரும் மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பை லோக் சத்தா கட்சி கொள்கை அடிப்படையில் வரவேற்கிறது.

அரசியல் கட்சிகளை பொதுநலத்துக்கு அல்லாமல் தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்துவோர்க்கு இத்தீர்ப்பு கசப்பை தரும்.

இத்தீர்ப்பு கட்சிகளை வெளிப்படையாக இயங்க வைப்பதோடு, அவர்களின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன் பகிர வழிவகுக்கும்.

தங்களிடம் ஒட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகள் எப்படி செயல்படுகின்றன என்று அறிய மக்களுக்கு உரிமை இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என லோக் சத்தா கட்சி வெகு நாட்களாகவே கோரிக்கை வைத்துவருகிறது. நிதி திரட்டல் மற்றும் செலவீனம் ஆகிவற்றில் வெளிப்படைத்தன்மை, கட்சி உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, வேட்பாளர் தேர்வில் வழிமுறைகளை ஆகியவற்றை கட்சிகள் கடைபிடிக்கவேண்டும்.

கட்சியின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து இணையதளத்தில் வெளியிடுவதை நாட்டிலேயே முதல்முறையாக செய்தது லோக் சத்தா கட்சி என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய தகவல் ஆணையத்தின் இந்த பரிந்துரை தேர்தல் சீர்திருத்தத்தில் சிறிய ஆனால் முக்கியமான படி. எனினும் தேர்தலில் கருப்பு பணம், ஒட்டு விற்பனை ஆகியவற்றை தடுக்க தற்போதுள்ள FPTP தேர்தல் முறையை மாற்றி இந்திய சூழ்நிலைகேற்ப விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த வேண்டும் என லோக் சத்தா கோரிக்கை வைக்கிறது.

அணைத்து கட்சிகளும் இந்த உத்தரவை மதித்து தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமாய் லோக் சத்தா கட்சி கேட்டுக் கொள்கிறது.

Categories: Press Releases
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: