கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேறுமா?

Saturday, June 15th, 2013 @ 11:27AM

school-children

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (2009)-ஐ அமல் படுத்தும் விதமாக சமீபத்தில் தமிழக அரசு ஒரு அரசானையை வெளியிட்ட்து. இதில் தனியார் பள்ளிகளில் 25% சதவீத ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளையும், முக்கியத் தேதிகளையும் குறிப்பிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு வருடமும் கீழ்குறிப்பிட்ட தேதிகளில் ஒவ்வொரு பணியும் முடிக்கப்படவேண்டும்.

1. ஒவ்வொரு பள்ளியும் தன் தொடக்க வகுப்புகளில் எவ்வளவு மொத்த காலியிடங்கள் உள்ளன என்பதை தயார் செய்ய வேண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி(ஒவ்வொரு வருடமும்)
2. அரசாணை No.9 பள்ளிக் கல்வித் துறை தேதி:18.01.2011 குறிப்பிட்டுள்ளபடி 25% ஒதுக்கீடு தொடர்பான காலியிடங்கள் எத்தனை தனி பதிவேட்டில் குறிப்பிட்டு மாவட்ட குழுவிற்கு அனுப்ப வேண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி(ஒவ்வொரு வருடமும்)
3. மேற்கண்ட 25% காலியிடங்கள் எத்தனை என்பதை ஒவ்வொரு பள்ளியும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கவேண்டும். ஏப்ரல் 2-ஆம் தேதி(ஒவ்வொரு வருடமும்)
4. சிறுபான்மை தனியார் பள்ளி நீங்களாக அனைத்துத் தனியார் பள்ளிகளும் 25% ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கை செய்ய வேண்டும். மே 2(ஒவ்வொரு வருடமும்)
5. விண்ணப்பங்கள் வழங்குதல் மே 3 – மே 9(ஒவ்வொரு வருடமும்)
6. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்க கடைசி நாள்(விண்ணப்பங்கள் பெற்றுக் கொண்டதிற்கான ஒப்புகைச் சீட்டு கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்) மே 9 (மாலை 5 மணிக்குள்)(ஒவ்வொரு வருடமும்)
7. தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான மாணவர்கள் பட்டியல் மற்றும் தகுதியிழந்த மாணவர்கள் பட்டியல் அதற்குரிய காரணங்களோடு வெளியிடுதல் மே 11 (மாலை 5 மணிக்குள்)(ஒவ்வொரு வருடமும்)
8. தகுதியான மாணவர்கள் 25% சதவீததிற்கு அதிகமாக இருப்பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுடைய பெற்றோர் அவர்களுடைய விருப்பத்தின் பெயரில் அனுமதிக்கப்படுவர். மே 14 (காலை 10.30 மணிக்குள்)(ஒவ்வொரு வருடமும்)
9. மேற் சொன்ன நடைமுறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் பெயர் பட்டியல் 10 சதவீத காத்திருப்போர் பட்டியலுடன் வெளியிடப்படவேண்டும். மே 14 (மதியம் 2 மணிக்குள்)(ஒவ்வொரு வருடமும்)
10. அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும் மே 20(ஒவ்வொரு வருடமும்)

இது தொடர்பாக விவாதிப்பதற்காக ‘பாடம்&srquo; இதழ் ஆசிரியர் திரு. நாராயணன் அவர்கள் ஒரு கலந்தாய்வு கூட்டதிற்கு மே-1ஆம் தேதியன்று ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழகத்தின் கல்வியில் அக்கறை கொண்ட ஆர்வலர்கள் திரு. ராஜகோபாலன், திருமதி. வசந்தி தேவி, திரு. சண்முக வடிவேலன், திருமதி அருணா, திரு. அருமைதாசன் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் சீராக செயல்படுதிட கீழ்கண்ட முக்கிய விசயங்களை பற்றி விவாதிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ஒரு குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

  1. கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் தவிர்த்த தனியார் அறக்கட்டளைப் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் 25% அளவிற்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வழிகாட்டுதல் அடங்கிய அரசாணை எண்.60 1-4-2013 நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகள், சிக்கல்கள் ஆகியவற்றை அடையாளம் காண்பது.
  2. அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளை நிரந்தரமாக மூட வைப்பது.
  3. பள்ளி மேலாண்மைக் குழு – நடைமுறை சிக்கல்கள், எஸ்.எஸ்.ஏவின் நேரடி தலையீடு/பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினால் குழப்பம் அவற்றை சிறப்பாகச் செயல்பட வைப்பது எப்படி?
  4. மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அரசியல்படுத்துவது, தொடக்கத்திலேயே திட்டமிட்டு அரசால் பேசா பொம்மை அமைக்கப்படுவது.
  5. கல்வி உரிமைச் சட்டத்தைப் பற்றி நலிந்த பிரிவினரிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்வது.
  6. கல்விக் கட்டணக்குழு பரிந்துரையைத்தாண்டி, இவ்வாண்டும்கூட, எல்லாத் தனியார் பள்ளிகளும் பெற்றோர்களிடம் பணாமாகக் கட்டணம் வசூலித்து வருகின்றனர். சில பள்ளிகள், துண்டுச் சீட்டில் ரசீது கொடுக்கின்றனர்.(இது கல்வி உரிமைச்சட்டத்தின் அடிப்படையையே கேலிக்கூத்தாகி வருகிறது)
  7. பள்ளிக்கல்வியின் தரம், அரசு உதவி பெறும் பள்ளிகளின் இன்றியமையாது சேவை ஆகியவையும் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியவை

நந்தகுமார்

Categories: Article, May 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: