திருப்பூர் இரயில்வே மேம்பாலத் திட்டம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Sunday, June 16th, 2013 @ 10:57PM

திருப்பூர் இரயில்வே மேம்பால திட்டத்தில் அதிகாரிகள் தன்னிச்சையாய் செய்த மாற்றங்களை எதிர்த்து லோக் சத்தா கட்சியின் திருப்பூர் மாவட்டக் கிளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் சாராம்சம்

2007-ஆம் ஆண்டு திருப்பூர் நகரின் குமரன் சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அனால் எந்த ஒரு அரசு அறிவிப்பும் இல்லாமல், வெளிப்படைத்தன்மை இல்லாமல் அதிகாரிகளின் யதேச்சாதிகார முடிவால் இத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு எந்தவித காரணமும் தெரிவிக்கப்படாததோடு இம்மாற்றங்கள் உயர் அதிகாரிகளின் அனுமதியையும் பெறவில்லை.

இம்மாற்றங்கள் இத்திட்டத்திற்கான செலவுகளை அதிகப்படுத்துவதோடல்லாமல், போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தி மக்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும்.

இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் இது எவ்வாறு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கி அதிகாரிகள் தன்னிச்சையாய் செய்த இம்மாற்றங்களை தடைசெய்து முதலில் தீட்டிய திட்டத்தையே செயல்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோருக்கு சட்ட முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.

வழக்கு தொடர்பான விவரங்கள் – https://dl.dropboxusercontent.com/u/100376062/Press-Release/tirupur-railway-bridge-petition.pdf

Categories: Court Cases, Press Releases, Tirupur News
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: