ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். ஊழல் எதிர்ப்பாளர்களை காக்கும் போராட்டம்

Sunday, June 30th, 2013 @ 8:55PM

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி தருவதாக அரசிடம் பணம் பெற்று ஊழல் செய்கிறது ‘FANA’ என்னும் நிறுவனம். லோக் சத்தா கட்சியின் கோவை பொருளாளர் திரு.மனோஜ் இந்த ஊழலை வெளிக்கொண்டுவருகிறார். மாவட்ட ஆட்சியர், அமைச்சர் யாவரும் அந்த நிறுவனத்தின் மீது ‘குற்ற நடவடிக்கை’ பாயும் என உறுதிகூறுகிறார்கள். இவையெல்லாம் நடந்தது 2011.

இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முரணாக அதே நிறுவனத்திற்கு அரசு உதவிகள் தொடர்கிறது. அவர் தொடர்ந்து ஊழல் செய்கிறார். மனோஜ் எங்கே தன் ஊழலை மீண்டும் வெளிக்கொண்டு வருவாரோ என அவரை நிறுவனர் மிரட்டுகிறார். பொய் வழக்கும் போடுகிறார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக, அரசின் பணத்திற்காக, நாட்டிற்காக  போராடிய மனோஜ் தாழ்த்தப்பட்டவர்களை காக்கும் சட்டத்தாலேயே பொய்யாக வீழ்த்தப்படுகிறார். இன்று 6வது நாளாக சிறையில் வாடுகிறார்.

 
இவை யாவும் இன்று வரலாறு. கடைசி 6 நாட்களில் நாங்கள் பலரை சந்தித்துள்ளோம், பல சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டியுள்ளோம், பல முறை ஊழல் எதிர்த்து  பேசியுள்ளோம், பல ஊழலை எதிர்ப்பவர்களை காக்க பல கட்டங்கள் தாண்டியுள்ளோம். எந்த இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும்,  நாளை காலை ஊழல் எதிர்ப்பிற்கான சான்றாக, நல்லவர்களை காப்பவர்களாக நாங்கள் இருப்போம். நாளை பெரிதாக ஒன்றும் நடக்காமல் போகலாம். எங்கள் போரட்டம் தொடரும்.
 

ஊழலை கண்டிப்பாக இந்த நாட்டை விட்டு வெளியேற்ற முடியும் என நினைப்பவராக நீங்கள் இருந்தால், நாளை நமக்கும் இந்த நிலை வரும் என உணர்பவராக இருந்தால், ஒரு 2 மணி நேரம் நாளை காலை ஒதுக்குங்கள்.

 

நேரம் – காலை 10-12

 

இடங்கள்:
சென்னை – வள்ளுவர் கோட்டம் – தொடர்பு – குமார் – 9962007040
கோவை – ரெட் கிராஸ் – தொடர்பு – சபாபதி – 8220077848
திருப்பூர் – குமரன் சிலை – தொடர்பு – சுந்தர பாண்டியன் – 9843044410
கரூர் – தாலுக்கா அலுவலகம் – தொடர்பு – பெரியசாமி – 9894266392

 

Our Protest is not in Anger; but with a REASON.

 

Categories: Article
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: