சர்க்கரை ஆலை – கட்டுப்பாடு தளர்த்தல்

Wednesday, June 5th, 2013 @ 2:18PM

sugarcaneசர்க்கரை – இந்தியாவில் உப்பிற்கு அடுத்தபடியாக வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் என இதை சொன்னால் மிகையாகாது. சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டுக்கு சுமார் 250 இலட்சம் டன் சர்க்கரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த சர்க்கரை உற்பத்தி தொழில் இந்தியாவில் எப்படி உள்ளது? நீங்கள் ஒரு சர்க்கரை உற்பத்தி ஆலைக்கு சொந்தக்காரர் என நினைத்து கொள்ளுங்கள். நீங்கள் உற்பத்தி செய்யும் சர்க்கரையில் 10 சதவீகிதத்தை கட்டாயமாக மத்திய அரசுக்கு விற்க வேண்டும். அதுவும் அவர்கள் என்ன விலைக்கு கேட்கிறார்களோ!! அதற்கான உற்பத்தி செலவு அதை விட அதிகமாக இருந்தாலும் அரசின் விலைக்கு தான் விற்க வேண்டும்.

இந்த சர்க்கரை தான் பொது விநியோக கடைகளில் (ரேஷன் கடைகளில்) விற்கப்படுகின்றன.

ஒரு கிலோ சர்க்கரை சந்தை விலையில் (Market Price) 32 ருபாய். ஆனால் சர்க்கரை உற்பத்தியாளர்கள் 10% உற்பத்தியை 20 ரூபாய்க்கு மத்திய அரசிடம் விற்க வேண்டும். இதனால் சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பு 3000 கோடி ருபாய் !! மத்திய அரசு ரேஷன் விநியோகத்திற்காக குறைந்த விலையில் சர்க்கரை விற்பதற்கு தனியார் ஆலைகள் வருவாய் இழப்புக்கு ஆளாகிறார்கள். நியாயமாக அதை அரசு தானே ஏற்க வேண்டும்.

இத்தனை காலம் இந்த தவறை செய்து வந்த மத்திய அரசு தற்போது இந்த கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 4 அன்று வெளியிட்டது மத்திய அரசு. இந்த புதிய கொள்கையின்படி இனி சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது. அரசிற்கு வேண்டிய சர்க்கரையை சந்தை விலைப்படி தான் அரசும் வாங்க வேண்டும். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை வழங்கும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் சர்க்கரை இனி என்ன ஆகும்?

அதில் எந்த மாற்றமும் இருக்காது. இவ்வளவு காலம் தனியார் ஆலைகள் ஒரு கிலோ 32 ருபாய் சர்க்கரையை 20 ருபாய்க்கு விற்று வந்தன. அதை வாங்கி ரேஷன் கடைகளில் 13 ருபாய் 50 காசுகளுக்கு கொடுத்து வந்தது அரசு. அதாவது 12 ருபாய் தனியார் ஆலைகள் மீது கட்டாயமாக செலுத்தப்பட்ட செலவு. மீதம் 6 ருபாய் 50 காசுகள் அரசின் செலவு.

ஆனால் இப்போது சந்தை விலையான 32 ரூபாய்க்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து அரசு சர்க்கரையை வாங்கும். மொத்த மானிய தொகையும் அரசே ஏற்கும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 2500 கோடி செலவாகும்.

இந்த அறிவிப்பு சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கையும் உற்பத்தியும் அதிகரிக்க ஊக்குவிக்கும்.

யுவராஜ்

Categories: Article, May 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: