ஓயாத அலைகள் – பாகம் 3

Friday, July 26th, 2013 @ 9:23PM

கச்ச(ட்சி)த் தீவு அரசியல் – 2

Maritime Boundaryசுதந்திரத்திற்கு பின்னரும் கச்சத்தீவு இந்தியாவின் வசமே இருந்துவந்தது. 1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் (map) கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.

1955ஆம் ஆண்டு, இலங்கை அரசு திடீரென்று, கச்சத் தீவினைத் தன் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி தரும் இடமாகத் தேர்ந்தெடுத்தது. இந்திய அரசு அந்த முடிவைக் கண்டித்தது. 1956ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசு மீண்டும் கச்சத் தீவைக் கடற்படைப் பயிற்சிக்குப் பயன்படுத்த முடிவெடுத்தது. இந்த முடிவை இந்திய நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள்.

இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். அப்பொழுது கையெழுத்தானது முதல் ஒப்பந்தம்.

இலங்கை என்ற இரு நாட்டுகளுக்கிடையே வரலாற்று நீர்ப்பரப்பு எல்லைக்கோடு
மற்றும் அது தொடர்புடைய விசயங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்
26 மற்றும் 28 ஜூன் 1974

இந்திய குடியரசு மற்றும் இலங்கை குடியரசு,
இரு நாடுகளுக்கிடையே இருக்கும் வரலாற்று நீர்ப்பரப்பு எல்லைக்கோடு மற்றும் அது தொடர்புடைய விசயங்களுக்காக இரு நாடுகளுக்கும் ஒப்புரவான (fair and equitable) முடிவு எட்ட விருப்பம்,
வரலாறு, இதர சான்றுகள் மற்றும் சட்ட நோக்கங்களை அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து,
ஒத்துக்கொண்டவை கீழ்வருமாறு:

சட்டப்பிரிவு கூறு 1

பாக் நீரிணையிலிருந்து ஆதாம் பாலம் வரை இந்தியா மற்றும் இலங்கைக்கு இருக்கும் எல்லைக்கோடு பெரிய வட்டத்தின் புசையில் (arcs of Great Circle), வரையறுக்கப்பட்ட அஷகரேகை மற்றும் தீர்க்கரேகையால் (Latitude and Longitude) பின் வரும் நிலைகளுக்கு இடையில், இதே வரிசை முறையில் அமையும்.

நிலை 1 : 10° 05′ வடக்கு, 80° 03′ கிழக்கு
நிலை 2 : 09° 57′ வடக்கு, 79° 35′ கிழக்கு
நிலை 3 : 09° 40.15′ வடக்கு, 79° 22.60′ கிழக்கு
நிலை 4 : 09° 40.15′ வடக்கு, 79° 22.60′ கிழக்கு
நிலை 5 : 09° 13′ வடக்கு, 79° 32′ கிழக்கு
நிலை 6 : 09° 06′ வடக்கு, 79° 32′ கிழக்கு

சட்டப்பிரிவு கூறு 2

சட்டப்பிரிவு கூறு 1ல் குறிக்கப்பட்ட நிலைகளின் ஆயங்கள் (Co-ordinates) புவியியல் ஆயங்கள். அவற்றை இணைக்கும் நேர்க்கோடுகள் இணைக்கப்பட்டுள்ள நிரல் படத்தில் (Chart) குறிக்கப்பட்டு இரண்டு அரசாங்கங்களால் அனுமதியளிக்கப்பட்ட நில அளவர்களால் கையெழுத்து இடப்பட்டது.

சட்டப்பிரிவு கூறு 3

கடலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலைகளின் உண்மையான அமைவிடம் உறுதி செய்ய, இரண்டு அரசாங்கங்களால் அனுமதியளிக்கப்பட்ட நில அளவர்களால் இருவரும் ஏற்றுக்கொண்ட முறையை பின்பற்றலாம்.

சட்டப்பிரிவு கூறு 4

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லைக்கோடுகளுக்கு இரு புறமும் இருக்கும் தங்கள் பகுதியில், இரு நாடுகளும் நீர்ப்பரப்பு, தீவுகள், கண்டத்திற்குரிய கடல் நீர்ப்பரப்பு, நிலத்தடி மீது தங்கள் இறையாண்மை மற்றும் அதிகார எல்லை மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

சட்டப்பிரிவு கூறு 5

இந்தளவிற்கு உட்பட்டு, இந்திய மீனவர்களும், யாத்ரீகர்களும் கச்சத்தீவு சென்று வருவது சுலபமாகவும், இலங்கை அரசாங்கத்திடம் நுழைவு அனுமதியோ (visa) அல்லது வேறு பயண கோப்புகளோ வாங்க வேண்டிய அவசியமில்லை.

சட்டப்பிரிவு கூறு 6

இரண்டு நாட்டு நீர்ப்பரப்பிலும் இரு நாட்டு மீனவர்களும் தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழிலை செய்யலாம்.

சட்டப்பிரிவு கூறு 7

ஒரு கனிம நில எண்ணெய் (Petroleum) அல்லது எரிவாயு கட்டமைப்பு அல்லது களம், அல்லது ஒரு கனிம கட்டமைப்பு அல்லது மணல் அல்லது சரளைக்கல் போன்ற கணிம வளம் கொண்ட களம், சட்டப்பிரிவு கூறு 1ல் குறிக்கப்பட்ட எல்லைக்கோட்டில் இருந்து, எல்லைக்கோட்டிற்கு ஒரு புறம் இருப்பது, எல்லைக்கோட்டின் மற்ற பக்கத்திலிருந்து பகுதியாகவோ அல்லது முழுதும் பயன்படுத்தப்பட்டால், இரு நாடுகளும் அந்த வளத்தை எவ்வளவு முனைப்புடன் பயன்படுத்தலாம் எனவும் அவற்றை எவ்வாறு பிரித்துக்கொள்ளலாம் எனவும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திகொள்ளலாம்.

சட்டப்பிரிவு கூறு 8

இந்த ஒப்பந்தம் ஒப்புதல் அளித்தபின் ஏற்றுக்கொள்ளப்படும். ஒப்புதல் பரிமாற்றம் செய்யப்படும்பொழுது இந்த ஒப்பந்தம் வலிமைபெறும். இது கூடிய விரைவில் நடக்கும்.

அலைகள் மோதும்…

ஜெகதீஸ்வரன்

Categories: Article, July 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: