சென்னையில் ஆதார் அட்டை நிலை

Tuesday, July 9th, 2013 @ 11:14AM

aadhaar-cardஎரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் , அரிசி, சர்க்கரை ,உரம் ,போன்ற பல வகை மக்கள் அத்தியாவசியப் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களுக்கும், அரசு நலத் திட்டங்களுக்கும் ,மானியங்களும்,சலுகைகளும் அரசு அளித்து வருகிறது. மானியங்களும் சலுகைகளும் பல விதத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதால், மக்கள் பணம் மக்களுக்கே கிடைக்கும் விதமாக மேற்ப்படி மான்யங்களும் சலுகைகளும் பணமாக அவரவர்க்கு நேரடியாக வங்கி கணக்கு மூலம் வழங்க அரசு முடிவு செய்து , அதன் முதல் கட்டமாக அனைவருக்கு ஆதர அட்டை என்ற அடியாள அட்டை வழங்க தபால் அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்தது.மேலும் இந்த அட்டை ரயில்வே டிக்கெட் எடுக்க , பேங்க் அக்கௌன்ட் துவக்க , பாஸ்போர்ட் வாங்க என எல்லாவிதத்திலும் ஒரு அடையாள அட்டையாக பயன்படும் வகையில் அமையும்.

அதற்காக நந்தன் நீலகேணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆவணங்கள் சேகரிக்கப் பணித்தது. ஆவணங்கள் சேகரிப்பதில் இந்த UIDAI ஆணையத்திற்கும் , உள்த்துறை அமைச்சகத்திற்கும் இடையே கருத்து வேற்பாடு காரணமாக 2011 அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் முழு வீச்சில் நடைபெறவில்லை.பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு UIDAI (இந்திய பிரத்யோக அடையாள அட்டை ஆணையம்) 60 கோடி பேருக்கும் , NPR (தேசிய மக்கள் தொகை பதிவகம்) 60 கோடி பேருக்கும் ஆவணங்கள் திரட்ட ஏற்பாடு செய்தார்.அதையொட்டி தமிழகத்தில் தபால் நிலையம் மூலம் UIDAI தகவல் சேகரிக்கும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைத்தார். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இதை புறக்கணித்து தமிழகத்தில் இப்பணியை தேசிய மக்கள் தொகை பதிவகத்தின் மூலமாகத்தான் நடை முறைபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.அதன்படி 2012 ஜூன் மாதம் முதல் மேற்படி பணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர்,ஈரோடு,கரூர்,திருவண்ணாமலை ,மதுரை,கடலூர், மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இதர மாவட்டங்களிலும் இப்பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுவரை தமிழகத்தில் 3 கோடி பேரிடம் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.2 கோடி பேருக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டுள்ளது.அடையாள அட்டை வடிவம் செய்வதில் இன்னமும் குழப்பம் இருப்பதால் ,யாருக்கும் இன்னமும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.தகவல் சேகரிக்கும் பணி மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தகவல் சேகரிக்கும் முகாம்கள் குறித்த தகவல் அறிந்து கொள்ள 044 24912993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் மண்டலம் வாரியாக இப்பணி நடைபெற்று வருகிறது.தேனாம்பேட்டை,கோடம்பாக்கம்,ராயபுரம்
தண்டையார்பேட்டை,அண்ணாநகர்,திரு வி க நகர் ஆகிய மண்டலங்களில் தற்போது நடைபெறுகிறது.விரிவாக்க மண்டலங்களில் எப்போது நடைபெறும் என்ற விவரம் மண்டல வாரியாக கீழ்க்கண்ட நமபர்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

திருவொற்றியூர் – 25993494,
மணலி-25941079,
மாதவரம்- 25530427,
அம்பத்தூர் -26253331,
வளசரவாக்கம் -24867725,
ஆலந்தூர் -22342355,
பெருங்குடி -22420600,
சோளிங்கநல்லூர் -24500923

வரும் அக்டோபர் மாதம் முதல் எல்லா மாநிலங்களிலும் இத்திட்டம் நிறைவு பெரும் என அரசு அறிவித்துள்ள நிலையில் இப்பணி எப்படி நிறைவு பெற்று இத்திட்டம் வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

தினகரன் போஸ்

Categories: Article, June 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: