திருப்பூர் ரயில்வே மேம்பாலத் திட்டம்

Thursday, July 11th, 2013 @ 11:04AM

அன்பார்ந்த திருப்பூரில் வசிக்கும் பொதுமக்களே!

வணக்கம். திருப்பூரில் அன்றாடம் நாம் போக்குவரத்து நெரிசல்களால் அவதிப்படுவதை நினைத்துப்பாருங்கள். இதற்கு தீர்வு காண்பதற்காக ஒரு நிமிடம் இந்த செய்தியைப் படியுங்கள்.

தற்போது புதிதாக டிஎம்எஃப் மருத்துவமனை அருகில் உள்ள இரயில்வே கீழ்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்…

1 தற்போதுள்ள இரயில்வே மேம்பாலம் மூலம் வரும் எல்லா வாகனங்களும் பிரதான ஒருவழி சாலையான குமரன்ரோடு வழியாகத்தான் தெற்கு பகுதிக்கு செல்கின்றன.

2 அதேபோல் புதிதாக நடைமுறைக்கு வரும் டிஎம்எஃப் இரயில்வே கீழ்பாலம் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கோர்ட் வீதி வழியாக சென்று குமரன்ரோடு வழியாகத்தான் தெற்கு பகுதிக்கு செல்ல நேரிடும்.

3 இப்பொழுதே குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு கீழ்பாலம் வழியாக குமரன் சாலைக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.!!

4 மேம்பாலம்ää கீழ்பாலம் கட்டுவதன் முக்கிய நோக்கமே போக்குவரத்து நெரிசலை குறைக்கத்தான். இப்படி இருக்க 2007ல் திட்டமிட்டபடி கொங்குநகர் யூனியன்மில் சாலையில் அமைய இருந்த இரயில்வே மேம்பாலமானது 2010ல் ஏன் டிஎம்எஃப் அருகில் கீழ்பாலமாக மாற்றப்பட்டது? பிரதான சாலையான குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தவா?

5 தற்போது வடிவமைக்கப்பட்ட இரயில்வே கீழ்பாலம் வரைபடத்தின்படி கொங்குநகரிலுருந்து ஊத்துக்குளி சாலைக்கு செல்லும் எல்லா பெரிய வாகனங்களும் கோர்ட் வீதி வழியாக குமரன் சாலைக்கு சென்று பார்க் ரோடுää இரயில்வே பீடர் சாலையை கடந்துதான் ஊத்துக்குளி சாலைக்கு செல்லவேண்டும். அதேபோல் ஊத்துக்குளி சாலையிலிருந்து கொங்குநகர் செல்லும் அனைத்து வாகனங்களும் இரயில்வே பீடர் ரோடு வழியாக குமரன் சாலைக்கு வந்து கோர்ட் வீதி வழியாக கீழ்பாலம் மூலமாக செல்ல நேரிடும். ஆகவேää இருதரப்பு வாகனங்களும் முக்கிய சாலையான நெருக்கடி மிகுந்த குமரன்ரோடு வழியாக செல்ல இருப்பதால் போக்குவரத்து இரண்டு மடங்கு அதிகமாகி நெரிசல் ஏற்படும்.

6 மேற்படி பாலம் அமைந்தால் கோர்ட் வீதிää குமரன்சாலை இரண்டையும் அகலப்படுத்தநேரிடும். மேற்படி சாலையில் வளர்ந்த நிலையில் நிறைய வியாபார நிறுவனங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களை இடித்து கோடிக்கணக்கான செலவு செய்து நிலம் கையகப்படுத்த வேண்டும். இது சாத்தியமா என்பதை விட அவசியமா என்பதை சிந்திக்க வேண்டும்.

7 மாற்றாக கொங்குநகர் யூனியன்மில் ரோடு இரயில்வே கேட் அருகில் மேம்பாலம் அமைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்து திருப்பூர் நகரின் மையப்பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கலாம்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் கொங்குநகர் இரயில்வே மேம்பாலம் அமைவது தொடர்பாக திருப்பூர் லோக்சத்தா கட்சியினர் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களை சென்னை சென்று சந்தித்து மனு அளித்துள்ளனர். விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையில் திருப்பூர் லோக்சத்தா கட்சியினர் உள்ளனர். இதற்கு இக்கட்டுரையைப் படிக்கும் பொதுமக்களும் ஆதரவு தந்து இத்திட்டம் முறைப்படி மக்கள் நலனுக்கானதாக நடைபெறவேண்டும் என்பதே எமது ஆசை.

ஆதரவுக்கரம் நீட்ட விரும்புவோர் தொடர்பு கொள்க : 98423 41607, 9842283003, 9843558758

எஸ்ஏ. முத்துபாரதி

Categories: Article, June 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: