லோக் சத்தா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் – ஊடக வெளியீடு

Tuesday, July 2nd, 2013 @ 12:19PM

ஊழலை வெளிக்கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோக் சத்தா கட்சியின் ஊழல் ஒழிப்பு போராளி திரு. மனோஜ் அவர்களை விடுதலை செய்யக்கோரியும், ஊழல் நிறுவனமான FANA மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் லோக் சத்தா கட்சி சார்பில் சென்னை, கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் லோக் சத்தா கட்சி உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சி, ஐந்தாவது தூண் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம், நேதாஜி தொழிற்சங்க தோழர்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஊழல் ஒழிப்பு இயக்கம், அண்டைடில்ட் குழுமம், இந்திய மாணவர் சங்கம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். லோக் சத்தா கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் திரு.அசோக், திரு.செந்தில் ஆறுமுகம், திரு.இரவிச்சந்திரன், மாநில தலைவர் திரு.ஜெகதீஸ்வரன், இந்திய மாணவர் முன்னணி மாரியப்பன், மக்கள் சக்தி அமைப்பு திரு.ஜலால், லோக் சத்தா கட்சியின் திருமதி. சித்ரகலா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த திரு.தீபக் மற்றும் திரு.பாடம் நாராயணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கோவையில் நடந்த ஆர்பாட்டத்தில் லோக் சத்தா கட்சி மாநில அமைப்புச்செயலாளர் திரு. ஈஸ்வரன், கோவை மாவட்ட தலைவர் திரு.சபாபதி, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த திரு.முகமது ரஃபி, திரு. சிறகுகள் விச்வநாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு. இரவீந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள், திரு. இமைகள் கோவிந்தசாமி, அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழக திரு. தங்கவேலு, சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு. சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கரூரில் மாவட்டத் தலைவர் திரு. பெரியசாமி தலைமையில் திரு. பழனிகுமார் முன்னிலையில் நடந்த ஆர்பாட்டத்தில் லோக் சத்தா உறுப்பினர்கள், இந்திய ஊழல் ஒழிப்பு இயக்கம் மற்றும் சட்ட நிறுவனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

Close
01-Jul-2013 10:05
Close
01-Jul-2013 10:05
Close
01-Jul-2013 10:05
 
Close
01-Jul-2013 10:08
Close
01-Jul-2013 10:36
Close
01-Jul-2013 10:36
 
Close
01-Jul-2013 10:42
Close
01-Jul-2013 10:46
Close
01-Jul-2013 10:46
 
Close
01-Jul-2013 11:04
Close
01-Jul-2013 11:04
Close
01-Jul-2013 11:10
 
Close
01-Jul-2013 11:17
Close
01-Jul-2013 11:20
Close
01-Jul-2013 11:28
 
Close
01-Jul-2013 11:55
Close
01-Jul-2013 11:55
Close
01-Jul-2013 12:02
 

Categories: Activities, Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: