தொடங்கிய இடத்திலேயே முடிப்போம்

Sunday, July 28th, 2013 @ 11:37AM

சமூக ஜனநாயகம் என்றால் என்ன? வாழ்க்கையின் முக்கிய மூன்று கோட்பாடுகளாக விடுதலை, சமத்துவம், சகோரத்துவம் மூன்றையும் அங்கீகரிப்புவதே சமூக ஜனநாயகம். இந்த மூன்றையும் தனித்தனியாக பாவிப்பதும், ஒன்றை விட்டு ஒன்றை பிரிக்க முயல்வதும் ஜனநாயகத்தின் குறிக்கோளை தோல்வி அடையச்செய்யும். சமூகத் தளத்தில் இருக்கும் வேற்றுமை ஒருவரை உயர்ந்தவராகவும், மற்றவர்களை தாழ்ந்தவராகவும் காட்டுகிறது. பொருளாதாரத் தளத்தில் நம்முடைய சமூகத்தில் ஒருவர் அதிகப்படியான சொத்துடனும், மற்றவர் பரம ஏழையாகவும் இருக்கிறார்கள். ஜனவரி 26, 1950 நாம் முரண்பட்ட வாழ்க்கையில் நுழைகிறோம். அரசியல் தளத்தில் சமுத்துவமும், சமூக, பொருளாதார தளத்தில் வேற்றுமை இருக்கும். எவ்வளவு காலம் இந்த இரு தளங்களிலும் வேற்றுமை தொடரும்? கூடிய விரைவில் இந்த வேற்றுமை களையாவிட்டால் அரசியல் ஜனநாயகம் என்பது ஒரு நாள் வெடித்து சிதறும்.

– அம்பேத்கரின் ஆழமான வரிகள் இவை.

பொருளாதார வேற்றுமையை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் கடந்த 63 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது? ஏழைகளையும், பணம் படைத்தவர்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவதற்காக அரசாங்கங்கள் செய்த முயற்சிகள் என்ன? – ஏழையை ஏழையாகவே வைத்திருப்பது, அதற்கென தொடர்ந்து திட்டங்கள் வகுப்பது.

பணம் படைத்தவனிடத்தே இருக்கும் பொருள் எல்லாம் ஏழை நீ கேட்காமலே வரும். நான் கொடுத்த இலவச வீட்டில், இலவச ஆடு, மாடுகள் மேய்த்து, இலவச மின்விசிறிக்கு அடியில் படுத்து, இலவச டி.வி. பார்த்து, இலவச அரிசியில் சோறு பொங்கி சாப்பிட்டு தூங்கு. உனக்கு தேவையான தரமான கல்வி, மருத்துவம் மறக்கடிக்கச் செய்து, உனக்கான சமூக, பொருளாதார பாதுகாப்பை மறுத்து, உன்னை குடிக்க வைத்து, உன்னை தன்மானம் இழந்தவனாக செய்வோம். உன் அடுத்த சந்ததியையும் ஏழையாக்கவே பார்த்துக்கொள்வோம்.

ஒரு தொலைநோக்கு திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதா, அல்லது அவர்களுடைய பிழைப்பை உயர்த்த இலவசம் தருவதா என்பது ஒரு அரசாங்கத்தின் முடிவு. அரசமைப்புச் சட்டப்பிரிவு கூறுகள் 38, 39, 41, 43, 45, 46 47 யாவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழங்க சொன்ன வாய்ப்புகளை, தங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்புகளாக கட்சிகள் ஆக்கிக்கொண்டதும், அதற்காக வாதாடுவதும் பெருந்துயரம்.

தேர்தல் இலவசங்கள் சட்டப்படி லஞ்சம் ஆகாது என்றாலும் அவற்றிற்கான அறிவிப்புகள் தடுக்கப்பட வேண்டும், அதற்கான நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்பது நாம் ஆரவாரித்து வ்ரவேற்க வேண்டிய மாற்றம்.

எங்கு இலவசங்களை பெருவாரியாக துவக்கி பொதுமக்களை தன்மானம் இழக்கச் செய்தோமோ, அந்த மாநிலத்திற்கு எதிரான வழக்கில் வந்துள்ள இந்த தீர்ப்பு துவங்கிய இடத்திலேயே இலவசங்களுக்கு ஒரு முடிவு கட்டுவதாய் அமையட்டும்! அமையும்!

Categories: Article, July 2013, Whistle, தலையங்கம்
Tags: ,

1 Comment to "தொடங்கிய இடத்திலேயே முடிப்போம்" add comment
Balasubramanian
July 31, 2013 at 8:36 pm

120 கோடி இந்தியர்களில் சுமார் 80 கோடி மக்கள் வறுமையில் இருப்பதாக மத்திய அமைச்சர் சொல்கின்றார்

இந்திய அரசியல் என்பது கட்சிகளின் அரசியல் என்றாகிவிட்டது
எங்கும் ஊழல் ஜனநாயகம் பணநாயகம் என்றாகிப்போனது இதை தட்டிக்கேட்க வேண்டிய மக்கள் மது மாது போதையில்.
இன்றைய ஊடகங்களும் அரசும் மக்களை இந்த மயக்கத்தில் இருந்து மீளாமல் பார்த்துக் கொள்கின்றன

ஒரு சில நல்லவர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி இருப்பது தவறு செய்பவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கின்றது.

மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடைவெளி அதிகமாகீட்டது இது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் கேடு இதை அரசியல் கட்சிகள் உணரவே இல்லை

தொடர் ஊழலால் உணவுப் பொருள் உள்ளிட்ட அனைத்திலும் விலையேற்றம் . விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லை மின்சாரம் இல்லை வியாபாரிகளுக்கு சில்லறை வணிகர்களின் வயிற்றில் அடித்து அந்நிய வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் மலிவு விலையில் விவசாய விளைநிலங்கள்

கைமாறாக வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் கருப்பு பணம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் கணக்கில் வராத செலவுகளுக்கு என்று நிறுவனங்களின் நன்றிக் கடன்.

அரசியல் கட்சிகள் மக்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை விட இப்படி நன்றிக்கடன் பெறுவதிலேயே திட்டங்கள் செயல்பாடுகள் அமைகின்றன

அதனால் தான் அரசியல் கட்சிகள் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் தகவல் கேட்டால் தரவேண்டும் என்று தகவல் ஆணையம் மீண்டும் வலியுறித்தி தீர்ப்பு அளித்துள்ளது

மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பை முதன் முதலாக வரவேற்ற கட்சி லோக் சத்தா கட்சி என்பதில் பெருமையாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட உன்னதமான தீர்ப்பை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் லோக் சத்தா கட்சி சோர்ந்து இருப்பது ஏன்

கட்சியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும் ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியும் பலன் பெற்றதனால் அல்லது பலன் பெறுவதற்காக அமைதியாக இருப்பதில் அர்த்தம் உண்டு

லோக் சத்தக் கட்சி தனது வலைத்தளத்திலும் சமூக வலைத்தளத்திலும் எழுதிவிட்டால் போதும் என்று நினைக்கின்றதா அல்லது உங்களுக்கும் எதிர்கால திட்டம்? உள்ளதா

அதனால் தான் அரசியல் கட்சிகள் தகவல் சட்டத்தை திருத்துவோம் என்று அறிவிப்பு செய்ததும் அந்தப் பலன் தங்களுக்கும் என்று அமைதியானதா

சாமானிய மக்களுக்கு இத் தீர்ப்பினையும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி துண்டு பிரசுரங்கள் அல்லது வீதி நாடகங்கள் அல்லது தெருமுனைக் கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டம் மூலம் மக்களிக் கவர்ந்து கட்சிக்கு நல்ல பெயரையும் நன் மதிப்பையும் பெற்றுத் தரலாமே

அதை விடுத்து சட்டங்கள் பற்றியும் சாதனைகளைப் பற்றியும் வீட்டுக்குள் இருந்து பேசுவது போல் வலை தளத்தில் இது போன்ற கருத்துக்களை எழுதினால் போதுமா? சிந்தியுங்கள்

மக்கள் விழிப்புணர்வு பணியில் எபோழுது அழைத்தாலும் நான் வருவேன்
நன்றி

Leave a Reply

%d bloggers like this: