ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு விரைந்து முறைப்படுத்த வேண்டும்

Wednesday, July 24th, 2013 @ 9:25PM

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு கோரியுள்ளது. இதற்காக நீதிமன்றம் தமிழக அரசுக்கு ரூபாய் 10,000 அபராதமாக விதித்துள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு நீட்டிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜனவரி மாதம் இருந்த காலக்கெடு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் கெடு ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது இன்னொரு மாதம் நீட்டிப்பு.

இவ்வாறு நீட்டிப்பு கோரியே தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் அரசின் மெத்தனப்போக்கை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது. நீதிமன்ற ஆணைகளை நிறைவேற்றுவதில் பொது மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரசே இப்படி நீதிமன்றத்தை அலட்சியம் செய்வது அழகல்ல.

இந்த காலதாமதத்தால் பொது மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் படும் அவதிகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்னொரு நீட்டிப்பு கோராமல் தற்போதுள்ள கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த லோக் சத்தா கட்சி கடந்த வருடம் முழுதும் பல்வேறு வாடிக்கையாளர் பாதுகாப்பு அமைப்புகளுடன் சேர்ந்து போராடியது, மக்களை திரட்டி அரசாங்கத்திடம் கோரிக்கையை தொடர்ந்து வைத்து வந்தது ஆகிய முயற்சிகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: