தமிழக அரசின் சுகாதார காப்பீட்டுத்திட்டம்

Tuesday, August 27th, 2013 @ 10:39AM

தமிழக அரசின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் காது வாழ் நரம்பு சிகிச்சை முறையை சேர்த்து உள்ளது. இந்த சிகிச்சை துவங்கும் முன்பு பல சோதனைகள் எடுக்க வேண்டும் .இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ 1 லட்சம் விகிதம் 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் உதவித்தொகைப் பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ 750 கோடி கட்டனதொகை இந்திய காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி அதன் மூலம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.33 கோடி குடும்பங்கள் பயனடைகின்றனர். வருடத்திற்கு ரூ 72000 குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். நோய்களின் தீர்வுக்கு உதவித்தொகை கொடுத்து உதவும் அரசு அந்த நோய்கள் ஏற்பட காரணமான கிருமிகளிடமிருந்தும் நச்சுருனிகளிடமிருந்தும் பொதுமக்களையும் கர்ப்பணி பெண்களையும் தடுப்பு மருந்து மூலம் காபாற்ற எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறுகிறது. இந்த சுகாதார காப்பீட்டு திட்டம் தேவையுள்ள மக்களுக்கு வெற்றிகரமாக சென்றடையவும் தமிழக மக்களின் நலத்தை பாதுகாக்கவும் பல செயல்முறைகளில் முன்னேற்றங்களையும் மாற்றுவழிகளையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.

அந்த வழிமுறைகள் பின்வருமாறு: நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு ஊக்குவித்தல், பொருட்கள் வாங்குதல் முறைகளை சீர்திருத்த வேண்டும், பயிற்சிகளுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்,சுகாதார வழங்குனர் கட்டணங்களை சீர்திருத்த ஊக்குவித்தல், அரசு மருத்துவமனைகளை தன்னாட்சி முறைக்குள் கொண்டு செல்வது, நிர்வாக செலவு உள்ளடக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும், ஆரோக்கியமான கண்காணிப்பு நிறுவுதல், சுகாதார சேவை தரம் பற்றிய குறிப்புகள் சேகரித்து ஆய்வு செய்யவேண்டும், தரத்தை மேம்படுத்த நிதி ஊக்கங்கள் வழங்கபடவேண்டும், நுகர்வோர் குறிப்புகள் சேகரிப்பு, தகவலை அணைவருக்கும் பகிர்தல், அரசு ஆதரித்த ஆம்புலன்ஸ் சேவை உருவாக்குவது, நோயினால் பாதிக்கபட்டோரின் குறிப்புகளை சேகரிப்பது, பாதிக்கபட்டோர்களில் குனமடைந்தவரகளின் குறிப்புகளை சேகரிப்பது. இவை அனைத்தையும் தமிழக அரசு மேற்கொண்டால் சுகாதார நல திட்டம் தேவையுள்ள மக்களுக்கு சீரான முறையில் சென்றடையும் வாயய்ப்புகள் அதிகமாகும்.

காது வாழ் நரம்பு சிகிச்சை முறைக்கு நிதி வழங்கும் அரசு அந்த நோய் ஒழிக்க கற்பணி பெண்களுக்கு சரியான தடுப்பு ஊசிகளை வழங்கவேண்டும். அடுத்த தலைமுறையினரின் நலனை பாதுகாக்கும் பொறுப்பில் அரசிற்கு பெரும் பங்குண்டு. காது வாழ் நரம்பு செயலிழப்பினால் பாதிப்படைந்த குழந்தைகளின் எண்ணிக்கையோ அல்லது பெற்றோர்களின் எண்ணிக்கையோ நமக்கு கிடைக்கும் நிலையில் பயனுள்ள செய்தி குறிப்புகளை சேகரிக்காமல் தமிழக அரசு தவறி வருகிறது.

தமிழக அரசு தேவையற்ற கருவுற்றிருக்கும் தடுப்பு மற்றும் முடித்தல் சேவைகளை வழங்குதல், முதல் குறிப்பு நேரத்தில் அணுக மற்றும் உயர்தர அவசர மகப்பேறு கவனிப்பு வழங்குதல், உயர் தரமான பிறப்பிற்கு முந்திய முதன்மை அளவில் பிரசவம் மற்றும் அடிப்படை அவசர மகப்பேறு கவனிப்பு அளித்தல், மகப்பேறு அவசரக்கால பாதுகாப்பு ஏற்பாடு நிலை உருவாக்குதலின் மூலம் பல நோய்களை சமூகத்திலிருந்து ஒழிக்க மூடியும்.சமூகத்தின் நோயாளிகளின் சிகிச்சையிற்கு உதவிப்புரியும் அரசு அந்த நோய் மீண்டும் சமூகத்தில் ஏற்படாமல் இருக்கவும் பரவாமல் இருக்கவும் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

வருமுன் காப்போம், வளர்ச்சியோடு செழிப்போம்.

– கண்ணன்

Categories: Article, July 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: