மயிலாப்பூர் டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விழா

Friday, August 2nd, 2013 @ 10:04PM

சென்னை மயிலாப்பூர் பட்டுநூல்காரன் தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுபான கடை நேற்று முதல் மூடப்பட்டது.

இதற்கு லோக் சத்தா கட்சி பெரும் பங்காற்றியுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறோம். மக்களை திரட்டி அவர்களை போராட்டத்தில் பங்கு பெற செய்தது முதல் அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது வரை லோக் சத்தா கட்சி இந்த கடையை மூடுவதற்கு தொடர்ந்து செயல்பட்டது.

போராட்டத்தில் பங்கெடுத்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை கௌரவிக்கவும், இதை முன்னுதாரனமாக வைத்து பிற பகுதி மக்களும் அவர்கள் பகுதி பிரச்சனைகளை அவர்களாகவே முன்னின்று தீர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இன்று மாலை 4 மணி அளவில் மயிலாப்பூர் பட்டுநூல்காரன் தோட்டத்தில் லோக் சத்தா சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் லோக் சத்தா கட்சியின் சார்பில் மாநில தலைவர் திரு. ஜெகதீஸ்வரன், மகளிர் அணி தலைவி திருமதி. எலிசபெத் சேஷாத்ரி, பொருளாளர் திரு. அசோக் ராஜேந்திரன், சென்னை மாவட்ட உறுப்பினர் செயலாளர் திரு. பழனிகுமார், மாநில இளைஞரணி செயலாளர் திரு. ஜெய்கணேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. பிரவீன், திரு. ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சிவ இளங்கோ, ஆம் ஆத்மி கட்சி நண்பர்கள், மக்கள் மது ஒழிப்பு இயக்க தோழர்கள் மற்றும் PNK தோட்ட பகுதிவாழ் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது மக்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனவும், இதே போல் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூட லோக் சத்தா கட்சி போராடும் எனவும் விழாவில் பேசிய லோக் சத்தா கட்சியினர் உறுதியளித்தனர்.

பகுதி மக்கள் சார்பில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.

விழாவில் எடுத்த புகைப்படங்கள்:

Close
01-Aug-2013 10:38
Close
01-Aug-2013 17:50
 
Close
01-Aug-2013 17:58
Close
01-Aug-2013 17:58
Close
01-Aug-2013 17:58
 
Close
01-Aug-2013 17:59
Close
01-Aug-2013 18:00
Close
01-Aug-2013 18:10
 
Close
01-Aug-2013 18:10
Close
01-Aug-2013 18:11
Close
01-Aug-2013 18:11
 
Close
01-Aug-2013 18:12
 

Categories: Activities, Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: