ரமலான் – நோன்பிலும் உழைக்கும் சகோதரருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!

Friday, August 9th, 2013 @ 10:55AM

இன்று உலகம் முழுவதும் ரமலான் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய சகோதரர்களை பொறுத்த வரை இந்த ரமலான் மாதம் இறை வழிபாட்டிற்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட மாதம். அரபு நாடுகளை பொறுத்தவரை இறை வழிபாட்டிற்காக பெரும்பாலும் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு, சிறப்பாக நோன்பு மேற்கொள்ளும் மாதம் இது.

ஆனால் உலகில், குறிப்பாக இந்தியாவில் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு, சிறப்பாக நோன்பும் வைத்து, தங்களுடைய தினப் பணிகளையும் பார்க்கும் கோடிக்கணக்கான் சகோதரர்கள் நிச்சயம் போற்றுதலுக்குரியவர்கள்.

2 வாரங்களுக்கு முன் பிரியாணி உண்ண ஒரு கடைக்கு சென்றேன். அங்கு பணி புரிந்தவர் மிக களைப்பாக காணப்பட்டார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. முதலில் சரியாக புரியாமல், பின்னர் அவரிடம், ‘நோன்பா பாய்?’ என்றேன். அவர் முகத்தில் திடீர் என புத்துணர்வு. களைப்பும் போய்விட்டது.

உணவு கடையில் வேலை செய்துகொண்டு, உட்கார கூட நேரம் இல்லாமல் இவரைப் போன்ற பல சகோதரர்கள் இருக்கிறார்கள், தொடர்ந்து இருப்பார்கள்.

உலகில் உள்ள எல்லா இஸ்லாமிய சகோதரருக்கும் லோக் சத்தா கட்சி தன் ரமலான் வாழ்த்துக்களை, உழைக்கும் சகோதரர்களுக்கு தன் மகிழ்ச்சியையும் தெரிவித்துகொள்கிறது.

Categories: Article
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: