குற்றம் நிரூபிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் காப்பாற்ற முனைகிறது – டாக்டர் ஜே.பி தாக்கு

Tuesday, September 24th, 2013 @ 10:27PM

English version: http://news.loksatta.org/2013/09/dr-jp-trashes-govt-move-to-rescue.html

Photo of Dr. Jayaprakash Narayanலோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. ஜெயப்ரகாஷ் நாராயண் இன்று கூறுகையில் “குற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிகப்பட்டவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பது தொடருமேயானால் வருங்காலத்தில் நிர்பயா வழக்கு போன்ற கொடூர குற்றங்கள் புரிந்தோர் கூட சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் செல்லக்கூடும்” என்றார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஓர் அவசரச் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவை “இதைபோன்ற ஒரு வெட்கத்திற்குரிய, ஜனநாயக விரோதமான ஒரு சட்டம் இருக்க முடியாது” என டாக்டர் ஜே.பி குறிப்பிட்டார்.

இரண்டு வருடத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்ற ஒருவர் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி இழப்பார் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளுகிற முயற்சியே இந்த அவசரச் சட்டம்.

முன்னதாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4)-ஐ செல்லாது என அறிவித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் ஆராய்ந்து அளிக்கப்பட்ட ஒன்று. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எந்த விதத்திலும் விரோதமாக இல்லை. கொடூர குற்றம் சாட்டப்பட்டு அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் அவரின் மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும் வரை எம்.பி அல்லது எம்.எல்.ஏ-வாக தொடரலாம் என்பது அபத்தமான வாதம்.

இந்தியாவில் செல்வாக்குள்ள ஒரு நபர் மீது அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மீது வழக்குகள் மிக குறைந்த அளவில் தொடுக்கப்படுகிறது. அதிலும் மிக குறைந்த வழக்குகளிலேயே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அவ்வாறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 6 சதவிகித வழக்குகளிலேயே குற்றம் நிரூபிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது.

இதையும் மீறி குற்றம் நிரூபிக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியில் தொடர அரசாங்கமும், எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் கூட்டாக இயங்குவது தார்மீக பொறுப்பின்மையையே காட்டுகிறது.

அரசியல் சார்பான போராட்டங்களில் பங்குபெற்று சிறை தண்டனை அனுபவிப்போர் பாதுகாக்கப்படவேண்டும் என்ற வாதமும் செல்லாது. எதிப்பை காட்டுவதற்காக வன்முறையில் ஈடுபடுவது ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது. தற்போது இந்தியாவில் அரசியல்வாதிகள் அரசியல் போராட்டம் சார்பான சிறு குற்றங்களுக்காக சிறைக்கு அனுப்பப் படுவதில்லை.

அரசாங்கம் இதைப் போன்ற விஷயங்களுக்கு அவசர சட்டத்தை கையில் எடுத்தால் அது நிச்சயம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும். அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் நகைப்புக்குரியதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் ஆகிவிடும். இவ்வாறு டாக்டர். ஜே.பி கூறினார்.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: