சேவை பெறும் உரிமை சட்டம் கோரி மனு

Monday, September 23rd, 2013 @ 11:12PM

தமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்தை செயல்படுத்த லோக் சத்தா கட்சி கோரி வருகிறது. இச்சட்டத்தின்படி எந்த ஒரு அரசு சேவைக்கும் கால அளவு நிர்ணயித்து குடிமக்கள் சாசனம் வெளியிட வேண்டும்) அந்த குறிப்பிட்ட கால வரம்புக்குள் மக்களுக்கு அதை அளிக்க வேண்டும். கால தாமதம் ஆகும் பட்சத்தில் அதற்குரிய நஷ்ட ஈட்டை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும். இதனால் பொது மக்கள் பெரிதும் பயன்பெறுவதுடன் இலஞ்சமும் பெரிய அளவில் குறையும்.

லோக் சாத்தாவின் இந்த கோரிக்கையின் ஒரு பகுதியாக சென்னை, திருப்பூர், கோவை மற்றும் கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அரசு அலுவலகங்களில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்தை செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் லோக் சத்தா கட்சியின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று இன்று அளிக்கப்பட்டது.

இத்துடன் தமிழகம் முழுவதும் இச்சட்டத்தை செயல்படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆகியோருக்கும் லோக் சத்தா கட்சி சார்பில் மாநில தலைவர் திரு. தெ. ஜெகதீஸ்வரன் அவர்களால் மனு அளிக்கப்பட்டது.

மனுவின் மின்நகல்:

Categories: Press Releases, Right to Services
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: