நீதித்துறை ஆணையம் அமைக்கும் லோக் சத்தாவின் கனவு நனவானது

Tuesday, September 10th, 2013 @ 12:01PM

English version: http://news.loksatta.org/2013/09/lok-satta-realizes-its-dream-of.html

‘நீதித்துறை நியமனங்கள் ஆணையம்’ அமைக்க வழிவகுக்கும் ‘அரசியலமைப்பு சட்ட (120 திருத்தம்) மசோதா 2013, மாநிலங்களவை நிறைவேற்றியதை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது.

‘நீதித்துறை நியமனங்கள்’ மற்றும் ‘இந்திய நீதித்துறை பணிகள்’ அமைப்பது குறித்து ஆலோசனை வழங்க லோக் சத்தா கட்சி நேர்மையான, நம்பிக்கைக்குரிய மூன்று மேதகைய நீதிபதிகளை ஒருங்கினைத்ததை இங்கே நினைவுகூருவது குறிப்பிடத்தக்கது. முன்னாள் தலைமை நீதிபதிகள் M.N வெங்கடசலைய்யா, J.S வர்மா, நீதிபதி V.R கிருஷ்ண ஐயர் மற்றும் டாக்டர் ஜே.பி அடங்கிய குழு, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனிக்க ‘தேசிய நீதித்துறை ஆணையம்’ அமைப்பது மற்றும் மாநில அளவில் நீதிபதிகளை நிர்ணயிக்க தேசிய அளவிலான, போட்டித் தேர்வு அடிப்படையில் ‘இந்திய நீதித்துறை பணி’ முறையை அமைப்பது குறித்த அறிக்கையை வழங்கியது.

லோக் சத்தா கட்சி இவ்வறிக்கையை அணைத்து முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களோடு பகிர்ந்து, அரசு மற்றும் எதிர்கட்சி தலைவர்களிடம் இதன் சிறப்பம்சங்களை எடுத்துறைத்தது.

மாநிலங்களவையால் ஏற்றுகொள்ளபட்ட மசோதா, மேதகைய மூன்று நீதிபதிகளின் பரிந்துரைகளை தழுவிய வடிவமே என்று லோக் சத்தாவின் தேசிய தலைவர் டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயன் சுட்டிக் காட்டினர்.

Photo of Dr. Jayaprakash Narayan‘இந்த சட்ட மசோதாவானது உயர் நீதிபதிகள் நியமனத்தில் செயலாட்சித் துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை ஒருங்கிணைக்கும்’ என்று செய்தி அறிக்கையில் டாக்டர் ஜே.பி கூறினார். நீதித்துறை நியமங்கள் மற்றும் பொறுப்புடைமை சட்டங்களை ஒன்றினைப்பதால், உயர்நீதித்துறையின் தரம் மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் உறுதிப்படும். ‘இந்திய நீதித்துறை பணிகள்’ துறை அமைப்பதும் மெய்யானால், அந்த அமைப்பு நீதித்துறைக்கு பேரளவிலான நன்கு தகுதிவாய்ந்த நீதிபதிகளை உருவாக்கிக் கொடுக்கும்.

உச்ச நீதிமன்றம் ‘கூட்டமைப்பு’ முறையை அறிமுகப்படுத்தி ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரத்தை பறித்துக்கொண்டதை டாக்டர் ஜே.பி நினைவுகூர்ந்தார்.

“இந்த அதிகார கைப்பற்றுதல் அரசியலமைப்புக்கு தெளிவாக முரண்பட்டது. அரசும் அதன் அங்கங்களுக்கும் இடையே உள்ள சமநிலை சரிபார்ப்பு கொள்கைக்கு விரோதமானது. தன்னிச்சையாக நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம், அவர்களிடமே இருப்பதென்பது வேறு எந்த குடியாட்சியிலும் காணப்பெறாத ஒன்று. உச்சநீதிமன்றத்தின் கூட்டமைப்பு முறையால் நீதிபதிகளை நியமிப்பது, நடைமுறையில் மனநிறைவை அளிப்பதாக இல்லை. நீதித்துறையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை கீழறுப்பதாக உள்ளது” என்று டாக்டர் ஜே.பி கூறினார்.

மக்களின் தன்னுரிமையை காப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவதிலும் முக்கியமாக இந்தியா போன்ற மிகுந்த பலதரப்பட்ட, வேறுபட்ட சமூகத்தின் முரண்பாடான கருத்துகளை ஒருமிப்பதிலும் சமரசபடுத்துவதிலும், இந்திய நீதித்துறையின் பங்கை டாக்டர் ஜே.பி எடுத்துக்கூறினார்.

பரிந்துரைக்கபடுள்ள ‘நீதித்துறை நியமனங்கள் ஆணையம்’ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள், சட்ட அமைச்சர், சட்ட செயலாளர் மற்றும் இரண்டு மேதகைய சட்ட வல்லுனர்கள் உள்ளடக்கிய குழுவாகும். பிரதமர், எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழு சட்ட வல்லுனர்களை தேர்ந்தெடுக்கும்.

‘இந்திய நீதித்துறை பணி’ துறையையும் அமைக்கும் சட்ட மசோதாவை ஆதரிக்ககுமாறு அணைத்து கட்சிகளுக்கும், சட்ட வல்லுனர்களுக்கும், வழக்குரைஞர்கழக உறுப்பினர்களுக்கும் டாக்டர் ஜே.பி வேண்டுகோள் வைத்தார்.

Categories: Press Releases
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: