லாலு மீது குற்றம் நிரூபணம் – லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது

Monday, September 30th, 2013 @ 9:52PM

English version: http://news.loksatta.org/2013/09/dr-jp-sees-glimmer-of-hope-in-lalus.html

Laluprasadyadavபீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான திரு.லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என சி.பி.ஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. “இதன்மூலம் தவறு செய்தவர் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது” என லோக் சத்தாவின் தேசிய தலைவர் திரு. ஜெயப்ரகாஷ் நாராயண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அளித்த செய்திக்குறிப்பில், இந்த தீர்ப்பு வருவதற்கு 20 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டி, இதற்கு மேல்முறையீடு செய்தால் இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று சி.பி.ஐ நீதிமன்றம் திரு. லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவருடன் சேர்த்து 44 போரையும், அவர்கள் 1990-களில் செய்த கால்நடை தீவன ஊழலில் குற்றவாளிகள் என தீர்பளித்துள்ளது.

திரு. ஜே.பி கூறுகையில் ” ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக அளவில் ஊழல் செய்த 10 அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றத்தை நிரூபணம் செய்து அவர்களின் சொத்துக்களை முடக்கினால் ஊழலை பெருமளவு குறைக்கலாம்.” என்றார்.

லாலு பிரசாத் வழக்கு நம் நாட்டின் அரசியல் நெருக்கடியை நமக்கு நன்றாக உணர்த்துகிறது. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினால் கவரப்பட்டு ‘அவசர நிலை’ இருந்தபோது அதை எதிர்த்து அரசியலில் வளர்ந்தவர் அவர். தொன்னூறுகளில் ஊடகங்களாலும், மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டவர். அப்படி இருந்தும் அவர் ஊழலில் இறங்கினார். அரசியலில் நல்லொழுக்கத்துக்கு வேலையில்லை என புரிந்துகொண்ட லாலு, சாதி அரசியல், பிரிவினைவாதம், சுற்றத்தாருக்கு தகாத சலுகை, ஊழல், குற்றவாளிகளை அரசியலில் புகுத்துதல் போன்ற தீய வழிகளில் சென்றார்.

லாலுவின் ஏற்றமும் இறக்கமும் ஒரு தலைமுறையின் தோல்வியை நமக்கு உணர்த்துபவை. நாம் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை தாமதித்து 30 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம்.

இன்றைய இந்தியாவில் நேர்மையும், அரசியல் அதிகாரமும் ஒன்றுக்கொன்று உடன்படாதவைகளாக ஆகிவிட்டன. நல்லவர்கள் அரசியலை வெளியேற வேண்டும் இல்லையேல் அறநெறியில் சமரசம் செய்துகொள்ள வேண்டும்.

நேர்மையான, திறமையான மற்றும் அர்பணிப்பு எண்ணம் உடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுமாறு உள்ள அமைப்பு நமக்கு தேவை. ஒரு நல்ல அமைப்பில் நியாயமான, பகுத்தறிகின்ற அரசியல்வாதிகள் பொக்கிஷமாக பார்க்கப்படுவார்கள். நம் நாட்டின் அரசியலை மாற்ற நமக்கு விகிதாசார பிரநிதித்துவ முறை வேண்டும்.

“மேலே விகிதாசார பிரநிதித்துவ அரசியல், கீழே அதிகாரப்படுத்தப்பட்ட மக்கள் மன்றம், எங்கும் பொறுப்புணர்வு – இவையே நம் அரசியல் அமைப்பை சீர்படுத்த நமக்கு தேவையானவை.

அரசியல் சீர்திருத்தம், உத்திரவாதமான அரசு சேவை, சட்டத்தின் ஆட்சி, அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி – இவையே வருங்காலங்களில் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இவற்றை நாம் அடைந்தோமானால், நம் ஜனநாயகம் பாதுகாப்பாக, இளைய தலைமுறையினரின் எதிர்காலம் பிரகாசமாக, நம் வாழ்வு செழிப்பாக இருக்கும்.

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: