ஊழலுக்கு எதிரான கூட்டமைப்புகளின் கருத்தரங்கு – டாக்டர். ஜேபி கலந்து கொள்கிறார்

Tuesday, October 29th, 2013 @ 8:02PM

Photo of Dr. Jayaprakash Narayanலோக் சத்தாவின் தேசிய தலைவர் டாக்டர். ஜெயப்ரகாஷ் நாராயண் அவர்கள், புதுதில்லியில் நாளை (30-அக்டோபர் 2013) ஊழலுக்கு எதிரான கூட்டமைப்புகளின் கருத்தரங்கில் பங்கெடுக்கிறார். இக்கருத்தரங்கு மத்திய பணியாளர் நலன், பொதுப் புகார்கள், ஓய்வூதிய அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இது ‘ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பின்’ தீர்மானங்களை செயல்படுத்துவதை மறுஆய்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது.

இந்தியா இந்த தீர்மானத்தில் முன்னர் கையெழுத்திட்டது நினைவிருக்கலாம்.

தீர்மானத்தில் உள்ள விதிகளும் இந்திய சட்ட திட்டங்களும் பொருந்துகிறதா என கண்டறிவதற்காகவே இந்த கருத்தரங்கை மத்திய அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

டாக்டர். ஜே.பி அவர்கள் தற்போதுள்ள ஊழல் தடுப்பு சட்டங்களில் தேவைப்படும் மாற்றம், ஊழலை ஒழிக்க அமைப்புகளில் தேவைப்படும் மாற்றம் ஆகியவற்றை பற்றி பேசுவார். இதில் திறன்வாய்ந்த, பாரபட்சமில்லாத விசராணை அமைப்பு, சிறப்பு நீதிமன்றங்கள், ஊழல் செய்தோரின் சொத்துக்களை முடக்க வழிமுறைகள் மற்றும் ஊழலை வெளிக்கொணருவோருக்கு பாதுகாப்பு ஆகியவை முக்கிய இடம்பெறும்.

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: