அழைப்பிதழ் – சேவை பெறும் உரிமை இயக்க துவக்கம்

Friday, November 8th, 2013 @ 5:04PM

அன்பு நண்பர்களே,

லோக் சத்தா கட்சி தமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டம் நிறைவேற்ற கோரி இயக்கத்தை சென்னையில் துவக்குகிறது. சேவை பெறும் உரிமை சட்டமானது அனைத்து அரசு சேவைகளுக்கும் கால அவகாசம் ஏற்படுத்தி அதற்குள் அந்த சேவையை குடிமக்களுக்கு வழங்காவிடில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வழிவகை செய்கிறது.

இயக்க துவக்கம்: லோக் சத்தா தொண்டர்கள், பொதுமக்கள் அவர்களின் அடிப்படை சேவைகளை பெற உதவி செய்வார்கள். மேலும் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி கையெழுத்து இயக்கமும் நடத்தப்படும்.

தேதி/நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை. சனிக்கிழமை, 9 நவம்பர் 2013.
இடம்: மயிலாப்பூர் குளம் பேருந்து நிலையம்
தொடர்பு கொள்ள: திரு. அசோக் (செல்:9382577264)

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Categories: Activities, Right to Services

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: