எனது அரசியல் – ஜெய்கணேஷ்

Friday, November 8th, 2013 @ 7:57AM

ஆகஸ்ட் 2011 மாதம் என்னை தலை கீழாக புரட்டி போட்ட மாதம் இந்தியா சுதந்திரம் பெற்ற அதே ஆகஸ்ட் மாதத்தில் உலகை இந்தியா பக்கம் திருப்பி பார்க்க வைத்த இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பட்டினி போர் அன்னா ஹசாரே தலைமையில் நடைப் பெற்றது.

அதற்கு முன் தேவைப்பட்டால் (போர் வந்தால்) ராணுவத்தில் சேர வேண்டும் என்பதை தவிர எனக்கு country பெரிய அக்கரை ஒன்றும் கிடையாது. ஆனால் 72-வயது இளைஞர் பட்டினி போர் புரிந்து ஜன லோக் பால்(JANA LOKHPAL)  கொன்டுவந்து நாட்டில் மாற்றம் வரவைக்க முடியும் என்று என்னை போன்ற பல ஆயிரம் இளைஞ்ர்களின் மனதில் விதையை வீசி தூங்குவது போல் நடித்தவரையும் விழிக்க வைத்தார்.

அதற்குமுன் ஏப்ரல் மாதம் நடந்த தக்கர் பாபா பள்ளியின் உண்ணாவிரத்தில் வழி போக்கனைப் போல் ஆதரவளித்த நான் அன்றிலிருந்து பல கேள்விகளுக்கு பதில் தேடி குழப்பத்தில் இருந்தேன். ஆகஸ்ட் மாதம் அன்ன ஹசாரே உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்தார்.

Lok Pal-Fasting-Chennai

என் மனைவியின் அனுமதிப் பெற்று அந்த மேடையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த 36 அகிம்சை வீரர்களுக்கு முதல் உதவி செய்யும் பொறுப்பையேற்று கொண்டு ஆங்கேயே இரவு பகலும் தங்கி அவர்களுக்கு உதவிகளை புரிந்தேன் 5 நாட்கள் Relay உண்ணாவிரதம் இருந்தேன். அந்த பணி என் வாழ்க்கை திசையை மாற்றும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. 7-வது நாள் என் மனைவியின் அனுமதியோடு தொடர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று உண்ணா விரத மேடைக்குச் சென்றேன். திங்கள், செவ்வாய், புதன் மாலை வந்தது இந்த 3 நாட்களில் பல இளைஞர்களிடம் மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைத்தது. பல லட்சம் கிடைக்கும் வேலையை உதறிவிட்டு லோக் பால் வேண்டும் என்று சுனாமியே வந்தாலும் லோக் பால் வரும் வரை இந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்று அமர்ந்திருந்த பாலாஜி, வேலை போனாலும் பரவாயில்லை லோக் பால் வேண்டும் என்றும் அச்சமில்லை, அச்சமில்லை என்ற பாரதி பாடலை முழங்கிக் கொண்டிருந்த முரளி இடியே வந்தாலும் லோக் பால் கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்று அமர்ந்திருந்த சுந்தர், இளங்கோ, அரவிந்த், செல்வராஜ் சந்துரு, சுஜாதா, செரியன் மற்றும் சிலர், அந்த மேடையில் முடிவு செய்தேன் இனி என் பெற்றோர், மனைவி, குழைந்தை என இல்லாமல் நாட்டுக்கு சிறிது உழைக்க வேண்டும் நம்து நாடு நமது மக்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இந்த ஊழல் வாதிகளை களை எடுக்க இந்த இளைஞ்ர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் அன்று வரை ஒரு வேலை உணவை உண்ண மறவாத நான் முதல் இரண்டு நாட்கள் 1 மணியிலிருந்து(matrum) மாலை 7 ஆனால் ஒரு ஆட்டுக்குட்டி vaithukul இங்கும் அங்கும் ஓடுவது போல இருக்கும் புதன் மதியம் இடியென்று ஒரு செய்தி, முரளி மற்றும் பாலாஜி உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. ஜாஹிர், சியாம், சுரேஷ் இன்னும் சிலர் அவர்களை அன்பு கட்டளையிட்டு போராட்டத்தை நிறுத்தச் சொன்னார்கள். பாலாஜி அவர் வீரு வரை சென்று விட்டுவிட்டு மீண்டும் உண்ணாவிரத மேடைக்கு வந்தேன்.

கட்டிய உடையோடு வீட்டை உதறி என்னை காதலித்து கரம்பிடித்த ஒரு கை குழைந்தையுடன் மனைவி, தின்று கெட்ட குடும்பம் என்று பெயரெடுத்த என் குடும்பத்தில் உண்ணாமல் உயிரை விடுவதா என்று சில குழப்பம்.

அந்த மேடையில் என்னைத் தவிர கல்யாணம் ஆகாதவர்கள்.முரளி, பாலாஜி உடல் நிலை மோசமடைந்த்து என்னை குழப்பியது உண்ணாமல் உயிரை விடுவதை விட வேறு ஏதாவது சுலபமான வழியில் நாட்டுக்கு சேவை செய்யலாம் என்று முடிவெடுத்து போராட்டத்தை முடித்துக் கொண்டேன்.

மறுபடியும் நல்ல ஓய்விற்கு பிறகு மனைவியின் கையால் உணவு விருந்து முடித்து விட்டு மறுபடியும் உண்ணாவிரத மேடைக்குச் சென்றேன். அனைவரிடமும் பேசினேன். அப்போது சிவஇளங்கோ என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். பதில் முழுநேர அரசியல் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை சிறிது நேரம் அவர் பித்து பிடித்தவரோ என்று கூட நினைத்து விட்டேன். அதன் பின் லோக் சத்தா கட்சியை பற்றி Dr. JP ஐ பற்றி கூறினார். அந்த விஷயத்தை நன்கு உள்வாங்கினேன். 11-ம் நாள் உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டது.

– தொடரும்

ஜெய்கணேஷ்

Categories: Article, September 2013, Whistle
Tags: , ,

1 Comment to "எனது அரசியல் - ஜெய்கணேஷ்" add comment
சரவணபிரகாஷ்
November 8, 2013 at 10:59 am

அருமை…. தொடரட்டும் சுய சரிதை….
ஆவலோடு காத்திருக்கிறோம்
அனுபவங்களை … படிக்க

Leave a Reply

%d bloggers like this: