லோக் சத்தா கட்சியின் சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றக் கோரிய பிரச்சாரத்திற்கு மக்கள் ஆதரவு

Saturday, November 9th, 2013 @ 11:39PM

லோக் சத்தா கட்சியின் மாநில தலைவர் திரு.ஜெகதீஸ்வரன் தலைமையில் சேவை பெறும் உரிமைச் சட்டப் பிரச்சாரம் இன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மயிலாப்பூர் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் மக்களின் நல்ல ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் மயிலாப்பூர் பொறுப்பாளர் திரு. அசோக், தொகுதி மற்றும் சென்னையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கார்டூன்கள் அடங்கிய பதாகைகள் கொண்டு பொது மக்களுக்கு சட்டத்தின் பலன்கள் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டால் எப்படி மக்கள் நாட்டின் உண்மையான மன்னர்களாக மாறுவார்கள் என்று ஜெகதீஸ் எடுத்துக் கூறினார். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அபாரதம் விதித்து அதன் மூலம் மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது இச்சட்டத்தின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். இந்தியாவின் பல பிற மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தை மேலும் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், சென்னையிலும், திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் புது பிரச்சாரங்கள் செயல்படுத்தப்படும். மேலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டி இந்த சட்டத்தை செயல்படுத்த லோக் சத்தா போராடும்.

இன்றைய நிகழ்வின் ஒரு பகுதியாக 15-வது முறையாக மக்களுக்கான குறை தீர் முகாம் நடத்தப்பட்டது. குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், சமையல் எரிவாயு இணைப்பு பெறுதல் முதலியவற்றில் பொது மக்களுக்கு இருந்த பல்வேறு குறைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டன. சட்டம் குறித்த நமது விழிப்புணர்வு செய்தி அந்த வழியாக சென்ற ஆயிரக்கணக்கான மக்களையும் மேலும் நமது முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானவர்ளையும் சென்றடைந்தது. சட்டத்திற்கு ஆதரவாக அவர்களிடமிருந்து கையெழுத்துக்களும் பெறப்பட்டன.

இத்துடன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Close
08-Dec-2002 12:00
Close
08-Dec-2002 12:00
Close
08-Dec-2002 12:00
 
Close
08-Dec-2002 12:00
Close
08-Dec-2002 12:00
Close
08-Dec-2002 12:00
 
Close
08-Dec-2002 12:00
Close
08-Dec-2002 12:00
Close
08-Dec-2002 12:00
 
Close
08-Nov-2013 10:27
Close
08-Nov-2013 10:27
Close
08-Nov-2013 10:27
 
Close
08-Nov-2013 10:29
Close
08-Nov-2013 11:45
Close
09-Nov-2013 10:19
 
Close
09-Nov-2013 10:20
Close
09-Nov-2013 10:20
Close
09-Nov-2013 10:21
 

Categories: Activities, Right to Services

No comments yet. Be the first!
Leave a Reply