RTI சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள். நிறைவேறுமா?

Sunday, November 10th, 2013 @ 11:57AM

அரசியல் கட்சிகளுக்கு தகவல் பெறும் உரிமைச் (RTI) சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அன்று எல்லா கட்சிகளும் ஒரே குரலில் குரலெழுப்புவதையும், மத்திய அமைச்சரவை கூடி சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதையும் பார்த்திருப்பூர்கள். ஆனால் மறுபுறம் அரசியல் கட்சிகளை இச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது சரியே என வெகு சில நேர்மையான கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் மத்தியதகவல்ஆணையத்தின்தீர்ப்பைகாப்பாற்றுவதுபற்றி விவாதங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என தகவல் உரிமை ஆர்வலர்கள் கொண்டாடும் அந்தத் தீர்ப்பின் பின்னணி என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தகவல் உரிமை ஆர்வலர் அனில் பிர்வால் 2010 அக்டோபர் மாத்திலும், சுபாஷ் சுந்தர் அகர்வால் எனும் மற்றொரு ஆர்வலர் 2011 மே மாதத்திலும் தனித்தனியே காங்கிரஸ், BJP, CPI, CPI(M), NCP, BSP  ஆகிய கட்சிகளிடம் அவர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகள், அதன் தற்போதை நிலை, அக்கட்சிகள் திரட்டிய நிதி, அதை யாரிடமிருந்து பெறுகின்றன தொடர்பான தகவல்களை RTI சட்டத்தின் கீழ் கேட்டு விண்ணப்பித்தினர்.

CPI,CPI(M) ஆகிய கட்சிகள்வெகு சில தகவல்களை மட்டும் தந்தாலும் அனைத்து கட்சிகளும் RTI சட்டத்தின் கீழ் தங்களிடம் தகவல்களை கோர முடியாது என கேட்ட தகவல்களை தர மறுத்தன.

தகவல் கோரிய ஆர்வலர்கள் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்ததோடு, மிகுந்த சிரமத்திற்கிடையே ஏன் அரசியல் கட்சிகளை RTI  சட்டத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்கான விவரங்களை சேகரித்து ஆணையத்திடம் அளித்தனர்.

இதனை விசாரிக்க மத்திய தகவல் ஆணையம் 2012 ஜூலையில் ஒரு அமர்வை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஓராண்டு நடைபெற்ற விசாரணைக்குப் பின் 2013-ஜீன் 3அம் நாள் மத்திய தகவல் ஆணையம்,RTI  சட்டம் 2(h) உட்பிரிவின் கீழ் அரசியல் கட்சிகள் பொது நிறுவனங்களாக (Public Authorities)  கருத முடியும் எனவும் RTI  சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஏதுவாகஅரசியல் கட்சிகள்பொது தகவல் அதிகாரியை(PIO), 6 வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம் இது எவ்வளவு முக்கியமான தீர்ப்பு என்பதை. ஆனால் அரசியல் கட்சிகள் இத்தீர்ப்பை கடுமையாக எதிர்ப்பதுடன் ஒரே அணியில் சேர்ந்து கொண்டு சட்டத்திருத்தம் செய்யும் முடிவிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. மக்களுக்காகத் தான் தாங்கள் கட்சி நடத்துவதாகச் சொல்லும் அனைத்துக் கட்சிகளும் பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தாங்கள் பதில் தரத் தேவையில்லை என்பதை எப்படி ஜனநாயகம் என்று ஏற்றுக் கொள்ள முடியும். அதே போல் தீர்ப்பில் மாற்றுக் கருத்துகளோ, திருத்தங்களோ தேவைப்பட்டால் மேல் முறையீடு செய்வதை விட்டு விட்டு அவசர சட்டத்திருத்திற்கு முனைப்பு காட்டுவது எப்படி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயலாக பார்க்க முடியும்.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகளிடமிருந்து உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு மக்களாகிய நாம்இத்தீர்ப்பின் முக்கியத்துவத்தையும், இன்றைய தேவையையும் புரிந்து கொண்டு முடிந்த வரையில் அனைவரும் கொண்டு சேர்ப்போம். இத்தீர்ப்பை காப்பாற்ற குரல் கொடுப்போம் வாருங்கள்.

அரசியல் கட்சிகள் அரசிடமிருந்து பெற்றுள்ள சலுகைகள் மற்றும் இதர நலன்கள்

கட்சி பெயர் இ.காங்கிரஸ் பா.ஜ.க கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் அ.இ.அ.தி.மு.க
நிலம் ஒதுக்கப்பட்டுள்ள இடம் ராஜேந்திரபிரசாத்ரோடு, கோட்லரோடு ராஜேந்திர பிரசாத் ரோடு – ரைசினியாரோடு-க்கு இடையே மார்க்கெட்ரோடு, கோட்லாரோடு கோட்லாமார்க் டி.டி.யுமார்க்
ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் அளவு 1.72 லட்சம்ச.அடி 92,871.41 ச.அடி 40,156.32 ச.அடி 13068 ச.அடி 846.08 ச.அடி
ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.1036 கோடி ரூ.557.23 கோடி ரூ. 240.94 கோடி ரூ.78.41 கோடி ரூ.65.08 கோடி
ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் 26, அக்பர்ரோடு5, ரைசினியாரோடு
24, அக்பர்ரோடு
சாணக்கியபுரி
11, அசோகாரோடு& 14, பண்டிட்பண்ட் ரோடு 8, டீன்முர்திலேன் AB-4, புராணாகுயிலா ரோடு தகவல்இல்லை
மாத வாடகை ரூ. 88099 + பர்னிச்சர்கட்டணம் ரூ. 89,173 +பர்னிச்சர்கட்டணம் ரூ.1550 ரூ.1550 தகவல்இல்லை
இதுவரை அளிக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்கு 300 கோடி ரூ.141.25 கோடி ரூ.18.13 கோடி ரூ.24 லட்சம் தகவல்இல்லை
2009 தேர்தலின் போது AIR-க்கு செலவிட்ட தொகை 7.68 லட்சம் ரூ. 6.72 லட்சம் ரூ.3.36 லட்சம் ரூ. 2.4 லட்சம் தகவல்இல்லை
2009-இல் தேசிய / மாநில கட்டமைப்புகளுக்காக செலவிட்ட தொகை 2.88 கோடி ரூ. 2.51 கோடி ரூ. 1.26 கோடி ரூ. 90 லட்சம் தகவல்இல்லை

– நந்தகுமார்

Categories: Article, August 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: