சேவை பெறும் உரிமைச் சட்டப் போராட்டத்தின் எழுச்சி

Tuesday, November 26th, 2013 @ 10:36PM

லோக் சத்தா கட்சியின் மாநில தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்ட சுமார் 50 உறுப்பினர்களும், பொது மக்களும் பேச்சாளர்களின் உரையில் மேலும் எழுச்சி பெற்றனர். சேவை பெறும் உரிமைப் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்த உறுதி எடுத்தனர்.
ஜெகதீஸ்வரன் கூறும் போது இந்த முக்கியமான சட்டம் நிறைவேறும் வரை லோக் சத்தாவின் அச்சட்டம் குறித்த பிரச்சாரப் பணி தொடரும் என்றும், வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே சட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆராய்ச்சி அணி செயலாளர் மகேஷ், சட்டம் பிற 16 மாநிலங்களில் எவ்வாறு செயல்படுகிறது  என்பது குறித்து பேசினார். குறிப்பாக பீகாரில் மக்களுக்கு மொத்தம் கோடி ரூபாய்க்கு மேல் மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் நம் தேர்தல் முறையில் உள்ள குறைபாடு தான் ஊழலின் அடிப்படைக் காரணம் என்றும் இது போன்ற சட்டங்கள் அதிகாரிகளை பொறுப்புக்கு உள்ளாக்கி சேவை தரத்தை உயர்த்தும் என்றும் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நல்லோர் வட்டம் பாலு, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தை சேர்ந்த திரு.வெங்கட், அர்விந்த், வாய்ஸ் ஆப் இந்தியன் பாலசுப்ரமணியன், மனித உரிமைக் கழகத்தை சேர்ந்த மோகன் ஆகிய சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து லோக் சத்தாவின் சீரிய மக்கள் பணியை பாராட்டிப் பேசினர்.

இணைப்புகள்

ஆர்ப்பட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Categories: Activities, Press Releases, Right to Services
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: