சேவை பெறும் உரிமைச் சட்டம் கோரிப் பிரச்சாரம்

Saturday, November 16th, 2013 @ 12:32AM

RTS-Picலோக் சத்தா கட்சி தமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டம் நிறைவேற்றக் கோரும் இயக்கத்தை நடத்தி வருகிறது. சேவை பெறும் உரிமைச் சட்டமானது அனைத்து அரசு சேவைகளுக்கும் கால நிர்ணயம் செய்து, அதற்குள் அந்த சேவையை குடிமக்களுக்கு வழங்காவிடில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வழிவகை செய்கிறது. இதற்கான சட்ட வரைவை முன்னர் லோக் சத்தா பாராளுமன்றக் குழுவின் முன் 08-02-2012 அன்று சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

மெரினாவில் நாளை நடைபெற உள்ள பிரச்சாரத்தின் மூலம் 15 மாநிலங்களில் ஏற்கனவே அமலில் உள்ள இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் சட்டத்தை நிறைவேற்றக் கோரி கையெழுத்து இயக்கமும் நடத்தப்படும்.

தேதி/நேரம்: காலை 6 முதல் 8 மணி. சனிக்கிழமை, 16 நவம்பர் 2013.
இடம்: மெரினா கடற்கரை (காந்தி சிலை அருகில்)
தொடர்பு கொள்ள: திரு. அசோக் (செல்:9382577264)

Categories: Activities, Press Releases, Right to Services
Tags: , , ,

1 Comment to "சேவை பெறும் உரிமைச் சட்டம் கோரிப் பிரச்சாரம்" add comment
vzshukoor
November 19, 2013 at 2:11 pm

மக்களுக்கான மிகமுக்கியமான அத்தியாவசியமான சட்டம்

Leave a Reply

%d bloggers like this: