அகில இந்திய லோக்சத்தா தொழிற்சங்க செய்திகள்

Thursday, December 26th, 2013 @ 3:09PM

திருப்பூரில் அமைந்துள்ள வர்தமான் திரெட்ஸ் பி.லிட் என்கிற நிறுவனத்தில் பணிபுரிந்த 7 தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக வேலை செய்தும் முறைப்படி சம்பளம், போனஸ், நஷ்டஈடு ஆகியவை தரப்படவில்லை என்ற புகார் வரப்பெற்றது. அதர்கு லோக்சத்தா தொழிற்சங்க தலைவர் எஸ்.மூர்த்தி, துணைத்தலைவர் ஆர்.விஜயராஜன், செயலாளர் பால்பாண்டியன் பொருளாளர் மதன கோபால், மாநில அமைப்புச்செயலாளர் சே.ஈஸ்வரன், மாவட்ட தலைவர் மகாலிங்கம் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகி மேற்படி நிவாரணம் பெறுவது குறித்து முறையிட்டார்கள். பின்னர் இது குறித்து பலகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. நிறுவனத்தின் சார்பில் மேலாளர் பி.கே.சண்முகம் மற்றும் அவர்களின்சட்ட ஆலோசகர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பல கட்டமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வருடத்திற்கு 20 நாட்கள் வீதம் சம்பள பணத்தை நஷ்டஈடாக வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதற்கான ஒப்பந்தம் தொழிலாளர்கள் லோக்சத்தா தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகம், சட்ட ஆலோசகர்கள் முன்னிலையில் கையெழுத்தாகி 7 தொழிலாளர்களுக்கும் சேர வேண்டிய மொத்தத்தொகை ரூ.2,10,950/- பெற்றுத்தரப்பட்டது. பிரச்சினையை சுமூகமாக முடிப்பதற்கு துணைபுரிந்த லோக்சத்தா தொழிற்சங்கத்திற்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி தொ¢விக்கப்பட்டது. இந்த வருடம் தீபாவளியே கொண்டாட முடியாதோ என எண்ணி ஏங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள், இந்த அளவிற்குப்போராடி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இவ்வளவு பொ¢ய தொகையை பெற்றுத்தந்ததற்கு லோக்சத்தா தொழிற்சங்கத்திற்கு குடும்பத்தோடு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Categories: Article, November 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: