குடிமக்கள் விழிப்புணர்வு நடைபயணம்

Wednesday, December 18th, 2013 @ 9:58PM

லோக் சத்தா கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. எலிசபெத் சேஷாத்ரி அவர்கள் நாளை முதல் நல்லாட்சி வேண்டி ‘குடிமக்கள் விழிப்புணர்வு நடைபயணம்’ செய்ய இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நடைபயணத்தை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திரு. M. தேவேந்திர ஒசா மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைவர் திரு. S.M. அரசு ஆகியோர் துவக்கிவைக்கிறார்கள்.

RTS banner

இந்த நடைபயணம் ‘நடப்போம்.. நல்லாட்சி கேட்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அரசு அலுவலகங்களில் மக்கள் லஞ்சம் தராமல் அரசு சேவைகளை பெற ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ மற்றும் உயர் மட்டங்களில் ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்தா’ பற்றியும் விழிப்புணர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது நாளை காலை 9 மணிக்கு மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலையிலிருந்து புறப்பட உள்ளது. இந்த நடைபயணம் காலை 9 மணி முதல் மாலை 7 வரை நடைபெறும் (மதியம் 1 முதல் 4 மணி நீங்கலாக).

இந்த நடைபயணத்தின் அட்டவணை பின்வருமாறு:

19- டிசம்பர் – மெரினா (காந்தி சிலை) முதல் சாந்தோம், லஸ் வழியாக கதீட்ரல் சாலை வரை
20- டிசம்பர் – மயிலாப்பூர் முதல் அடையார் வரை
21- டிசம்பர் – அடையார் முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை
22- டிசம்பர் – அண்ணா பல்கலைக்கழகம் முதல் வேளச்சேரி வரை
23- டிசம்பர் – வேளச்சேரி முதல் மடிப்பாக்கம் வரை
24-டிசம்பர் – மடிப்பாக்கம் முதல் மேடவாக்கம் வரை

இதில் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு லோக் சத்தா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Categories: Activities, Press Releases, Right to Services
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: