அரசு நிர்வாக பரவலாக்கமும் உள்ளூர் அரசாங்கங்களும் – பாகம் 1

Friday, December 27th, 2013 @ 9:50PM

உலகிலுள்ள மாபெரும் ஜனநாயக நாடுகளில் முக்கிய இடத்திலிருக்கும் இந்தியாவில் அரசின் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிலுள்ள மாவட் டங்களும் பெரிது. மக்கள் தொகையும் பெரிது. ஆனால் அரசு நிர்வாகம் மட்டும் மையப்பட்டு
கொண்டேயிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்களது பொறுப்புகளை குறைத்துக் கொள்ள எடுத்த முயற்சிதான் அரசு
நிர்வாக பரவலாக்கமும், உள்ளூர் அரசாங்கங் களும். சுதந்திரத்திற்கு பின்னர் அமைந்த மத்திய மாநில அரசுகள் உள்ளூர் அரசாங்கங்கள் இயங்கு வதற்கு போதுமான திறமை கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இல்லை என்ற காரணத்தினால் அதிகார பரவலாக்கத்தை முடக்கிவிட்டனர். ஆனால் வலுவுற்ற மத்திய மாநில அரசுகள் உள்ளூர் சுய அரசாங்கங்களுக்கு எந்த விதத்திலும் மாற்று இல்லை. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகளிடையே அதிகாரத்துவம் மையப்பட்டு இருக்கிறது. அதனால் பல அரசு நிர்வாகங் களில் ஊழல், திறமை அற்ற பணியாளர்கள், வரி ஏய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க அதிகாரங் களையும், நிதி ஒதுக்கீடையும் உள்ளூர் அரசு களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வளர்ந்து வரும் பெரும்பாலான நாடுகளில் 80% அரசியல் மற்றும் பொருளாதார பரவலாக்கம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு சிறந்த சமூக பலன் களை அளித்து வருகின்றது. நிதி ஒப்பந்த அமைப்பு கள் மற்றும் வரி பகிர்வு அமைப்புகளினால் சீன சமூகத்தில் பொருளாதார வளர்ச்சியை புகுத்த முடிந்துள்ளது. பிரேசிலினி நிதி ஒதுக்கீடு பர வலாக்கத்தினால் வலுவான உள்ளூர் அரசாங் கங்கள் வளர்ந்து வருகிறது. சமூக சேவை நன்மை களும், இணை பகிர்தல் ஃபார்முலாவும் தென் னாப்பிரிக்காவில் உள்ளூர் அரசுகளுக்கு அதிகார பகிர்வு ஏற்படுத்திய சமூக மேம்பாட்டுக்கான மறு மலர்ச்சி.

பரவலாக்கத்தை சமூகத்தில் புகுத்தும் நல்லெண்ண அடிப்படையில் அரசியலமைப்பின் 73,74 திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. நிதி கமிஷன், திட்டமிடல் குழு, பஞ் சாயத்து ராஜ்ஜியம், சமூக தணிக்கை, மக்கள் பிரதிநிதியை திரும்ப அழைக்கும் உரிமை போன்ற பல நல்ல சீர்திருத்தங்களை 73 மற்றும் 74வது அரசியல் திருத்தங்கள் மத்திய மாநில அரசு களுக்கு பரிந்துரைத்தது. நிதி பற்றாக்குறையினாலும், செயல்பாட்டு அதிகாரத்துவத்தினாலும் உள்ளூர் அரசுகள் செயலிழந்த நிலையில் இருக் கிறது. 1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பஞ் சாயத்து சட்டம் நிலையான நிர்வாக செயல்பாட்டு சக்தியின்மையாலும், கடமைகளின் கூரின்மை யாலும் தோல்வியை சந்தித்தது. மாவட்ட திட்டமிடல் குழு திருத்தங்களின் பரிந்துரைகள்படி உரு வாக்கப்படவில்லை. மாவட்ட வளர்ச்சிக் குழு சட்ட மன்ற உறுப்பினர்களாலும், பாராளுமன்ற உறுப்பி னர்களாலும் இயக்கப்பட்டது. அரசு நிர்வாக பர வலாக்கத்தின் மூன்று அடுக்குகளாக கிராம பஞ் சாயத்து, மண்டல் பரிஷத், ஜில்லா பரிஷத் என அரசியலமைப்புகளின் திருத்தங்கள் பரிந்துரைத்தது. உள்ளூர் அரசுகளுக்கு மாநில அரசு கள் அனைத்து பரஸ்பர விஷயங்களுக்கும் ஆத ரவு தர வேண்டும் என்ற பரிந்துரைக்கு பின்னரும் நிதி ஒதுக்கீட்டில் சரியான ஒத்துழைப்பும் தரப் படவில்லை. இந்தியாவில் செயல்படுத்தப்படும் சிறந்த நிதி பரவலாக்க சீர்திருத்தங்கள் கேரளா வில் நடைமுறையில் உள்ளது. மாநில சட்டசபை யில் உருவாக்கப்படும் சட்டத்திட்டங்களில் உள் ளூர் அரசுகளின் பங்களிப்பும், பரிந்துரைகளும் இருக்க வேண்டும் எனவும், உருவாக்கப்பட்ட சட்டங்களை உள்ளூர் அரச சபையில் பெரும்பான்மையோடு நிறைவேற்றிய பின்னரே அந்தந்த ஊர்களில் சட்டங்கள் அமலுக்கு வர வேண்டும் எனவும் திருத்தங்கள் பரிந்துரைத்தது. உள்ளூர் மக்களால் உள்ளூர் மட்டத்தில் செய்யக்கூடிய படைப்பு கள் அனைத்தையும் உள்ளூர் மக்களே உள்ளூர் மட்டத்தில் செய்ய வேண்டும்.

விவசாயம், நில மேம்பாடு, ஒருங்கிணைப்பு, மண் பாதுகாப்பு, நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, கோழி பண்ணை, சமூக மற்றும் பண்ணைக் காடுகள், சிறு தொழில், உணவு பதப்படுத்தும் தொழில்கள், கிராமப்புற வீட்டு வசதி, குடிநீர், சாலைகள், சிறு பாலம், போக்குவரத்து, மரபு சாரா எரிசக்தி ஆதா ரங்கள், வறுமை ஒழிப்பிற்கான திட்டங்கள், கல்வி, நூலகங்கள், கலாச்சார நடவடிக்கைகள், சந்தை கள், கண்காட்சிகள், சுகாதாரம், குடும்ப நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூகத் தின் பலவீனமான மக்களின் நலன் மற்றும் பொது விநியோக அமைப்புகளிலும் செயல்பட்டு அதிகார பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

11வது நிதி கமிஷன், மாநில அரசுகளை உள் ளூர் அரசாங்கங்களுக்கு அதிக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள பரிந்துரைத்தது. மாநில பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் தழுவிய மாவட்ட வாரியாக திட்டமிடப்பட வேண்டும். மாநில அரசு நிதி வளங்களை உள்ளூர் அரசுகளோடு பகிர்ந்து
செயல்பட வேண்டும். நிதி பரவலாக்கம் சிறந்த வரி பணிகள், வருவாய் பகிர்வு மற்றும் மானியங் களுக்கு வழி வகுக்கும். உள்ளூர் அரசுகள் மத்திய அரசின் உதவித்தொகை, உள்ளூர் வரிகள், கட்டணங்கள், மானியங்களையும் சேகரிக்க முடியும். இதன் மூலம் நடுத்தர அதிகாரிகளிடமிருந்து பண புழக்கத்தை தவிர்த்து ஊழலை ஒழிக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். மாவட்ட அளவில் அலு வலர்கள் உள்ளூர் மட்டத்தில் சிறந்த முடிவுகளை எடுக்க உள்ளூர் அரசாங்கங்களின் கட்டுப் பாட்டின் கீழ் வேலை செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு பதில் கூறும் பொறுப்போடு செயல்பட வேண்டும். பஞ்சாயத்து மக்கள் சாசனம், தகவல் பெறும் உரிமை சட்டங்கள், சுயேட்சை கண்காணிப்புத்துறை ஆணைக் குழு, மாவட்ட தணிக்கை பிரிவையும், அரசு ஊழியர்கள் பொறுப்போடு செயல்பட உருவாக்க வேண்டும்.

ஆனால் உள்ளூர் அரசாங்கங்களின் அலுவலர் கள் கட்டுப்பாட்டில் உள்ளூர் அரசு ஊழியர்கள் இல்லை. மக்களுக்கு உள்ளூர் அரசாங்கங்களால் சீரான சேவையை செய்ய முடியவில்லை.

மாவட்ட திட்டமிடல் குழுவிற்கு பதிலாக மாவட்ட வளர்ச்சி குழு அரசு வேலைகளை பரி சீலனை செய்கிறது. கிராம செயலகங்கள் பயிற்சி யின்மையாலும், காலியாக இருக்கும் பணிநிலை களினாலும் தோல்வியடைந்து வருகிறது.

ஒவ்வொரு கிராமத்தின் மக்கள் தொகை 1000த்திற்கு மேற்பட்டதாக இருந்தாலோ அந்த கிராமத்தின் மக்கள் வருமானம் வருடத்திற்கு
20,000த்திற்கு குறைவாக இருந்தாலோ அந்த கிராமத்தை தனி வருவாய் கிராமமாக பிரிக்க வேண்டும். இரண்டு வருவாய் கிராமங்களுக்கு இடையே இரண்டு மைல்களுக்கு மேல் தூரம் இல் லாதவாறு கிராமங்களை பிரிக்க வேண்டும். குக்கிராமங்கள், தொழில்நுட்ப மற்றும் நிதி வளங்கள் இல்லாத கிராமங்களையும் பிரிக்க வேண்டும். ஒருங்கிணைந்த திட்டமிடலால் – சிக்கல்களையும், நகர்ப்புற, கிராமப்புற வள பகிர்வு வாய்ப்புகளையும் பயன்படுத்தி சமாளிக்க வேண்டும். மாவட்ட மற்றும் மாநகர திட்டமிடல் குழுக்கள் அரசியலமைப் பின் 243 ZD கீழ் மாநில வாரியாக அமைக்கப்பட வேண்டும். கிராமங்கள் மற்றும் நகரங்கள் பற்றிய விரிவான வளர்ச்சி திட்டத்தை உருவாக்க உத வியை மத்திய, மாநில அரசுகள் உள்ளூர் அரசு களுக்கு வழங்க வேண்டும். மாநில சட்டமன்றம், மாவட்ட மற்றும் மாநகர திட்டமிடல் குழுக்களின் அமைப்பை வரையறுக்க வேண்டும். திட்டமிடல் குழுக்கள் வரையறுத்த திட்டங்களை குழுத்தலை வரால் மாநில அரசிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

–  தொடரும்…

– கண்ணன் 

Categories: Article, October 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: