மனித உரிமைகள் தினம் – நமக்கு என்ன வேண்டும்

Wednesday, December 11th, 2013 @ 9:15AM

ஊடக வெளியீடு  (10-டிசம்பர்-2013):

உலகம் முழுவதும் ‘மனித உரிமைகள்’ தினமாக இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. மனித உரிமைகளை பாதுகாப்பதே எந்த ஒரு நாகரீகமடைந்த சமூகத்திற்கும் தலையான கடமையாகிறது.

அதிகாரிகள் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி, ஒரு சாதாரண மனிதனுக்கு அநீதி இழைக்கும் போது அவர் அடைக்கலம் தேடி வருவது மனித உரிமை ஆணையத்திடமாகும். இவ்வாணையம் காவல்துறை என்கவுண்டர், விசாரணையில் கைதி மரணம், கலவரங்களின் போது துப்பாக்கிச்சூடு மற்றும் இன்னபிற மனித உரிமை மீறல்களை விசாரித்து நீதி வழங்கும் ஒரு முக்கியமான பணியை செய்கிறது.

இந்நிலையில் தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக காலியாக இருப்பது கவலை அளிக்கிறது. தலைமை இல்லாமல் ‘தமிழக மனித உரிமை ஆணையம்’ திறன்பட செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் அதிக சுதந்திராமாக செயல்படும் மனித உரிமை ஆணையம் கோரும் இவ்வேளையில், தமிழக அரசு ஆணையத்தின் தலைவரையே நியமிக்க அக்கறை காட்டாத போக்கு வருத்தம் அளிக்கிறது.

தமிழக மனித உரிமை ஆணையத்திற்கு உடனடியாக தலைவரை நியமித்து, மனித உரிமை ஆணையத்தை அதிக சுதந்திரத்துடனும் திறம்படவும் செயல்படுத்த தமிழக அரசை லோக் சத்தா கட்சி கோருகிறது.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: