கடிதம்

Monday, December 23rd, 2013 @ 6:06PM

சகோதரா,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நாம் இன்னும் சில மாதங்களில் நம்மை ஆள வேண்டிய தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நம் முன் பல முடிவு காண முடியாத ஏக்கத்தை பதிலாக தரக்கூடிய கேள்விகள் ஏராளமாய் உள்ளது. இந்த நிலை தரும் அழுத்தத்திலும் அதிகாரம் நம்மை பயமுறுத்துவதையும் கணக்கில் கொண்டு வாழ்வை அல்லது வாழ்தல் எனும் சடங்கை தக்க வைத்துக்கொள்ளும், முயற்சியில் தேர்தலை ஏதோ ஒரு சடங்காகவும், விடுமுறை அனுபவிக்க இன்னும் ஒரு நாள் எனவும், நமக்கு தொடர்பே இல்லாத ஒரு நிகழ்ச்சியின் வரவு போலவும் காணத்தொடங்கி பல காலம் ஆகிறது. அதை முற்றிலும் தவறு என்று சொல்லவில்லை. பலமில்லாத காகித குப்பை காற்றில் இலக்கு இன்றி சுற்றத்தான் முடியும். பலமற்ற, பயந்த வாழ்க்கை இலக்கு இன்று பயணிக்கும் இடு ஒரு சமூக நிர்ப்பந்தம் ஆகிவிட்டது. ஆனால் ஜனநாயகத்தில் மக்கள்தான் மன்னர்கள். நாம்தான் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து நமை ஆள ஆணையிடுகிறோம். ஆணையிட்டவுடன் கடமை முடிந்ததாய் நினைத்து பின் எல்லார் காலிலும் விழவும் பழகிக்கொண்டோம்.இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?. இருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாதது யார் தவறு? வாய்ப்பு இல்லை என்றால் அதன் அவஸ்தை வேறு. ஆனால் இருக்கும் வாய்ப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, பயன்படுத்தவே இல்லை என்றாலோ இதில் யார் தவறு. இதை நாம் சற்று உரத்து சிந்தித்து பார்த்து நம்மை தயார்படுத்திக் கொள்வோமா?

Parliament

பொதுவாக இளைஞர்கள் ஒருபுறம் தங்களது தனித்திறமைகளில் உயர் வளர்ந்து சுய சம்பாத்யங்களில் உயர உயர சென்று விட்டார்கள்.ஆனால் தாங்கள் வாழும் சமுதாயத்தின் அழுக்குகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது இது மாதிரி வேலைகள் எல்லாம் நமக்கு எதற்கு எனும் மனோபாவம் வெளிப்படுவது போல் தோன்றுகிறது. ஆனால் சமுதாய அவலம் என்பது எல்லோரும் சேர்ந்து அனுபவிப்பது .வாழும் இடத்தில் நல்ல சாலை வசதி, குடி நீர், மின்சாரம் இவை அத்தியாவசியமாகி விட்டது.ஆனால் இவை எல்லோருகும் கிடைக்கிறதா? இல்லை.ஆனால் வாழ்வின் எல்லா வளங்களும் ஒரு சிலருக்கு தேவைக்கு அதிகமாக கிடைக்கிறது. காரணம் ஒன்று அவர்கள் பணம் படைத்தவர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள். இவைகளை கண்டுமிளைய சமுதாயம் இவற்றில் ஒன்று பெற்றால்தான் இனி வாழமுடியும் என்று திண்ணமாக நம்புகிறார்கள்.இவற்றை பெறும் முயற்சிதான் வாழ்க்கை என்று நம்பி அதற்காக ஓட்டமாய் ஓடுகிறார்கள்.

சகோதரா,

இங்கு வளங்கள் ஏராளம். இவை எல்லார்க்கும் பங்கிடப்பட வேண்டும்.அந்த வேலையைதான் அரசாங்கம் செய்ய வேண்டும்.. அதை செய்ய வைக்க வேண்டியது மக்களின் கடமை. அந்த கடமையை வலியுறுத்தும் ஒரு புரிந்துணர்வு நாள்தான் தேர்தல் நாள்.அதில் நாம் நல்ல முடிவு செய்தால் இனி வளம் சூறையாடப்பட மாட்டாது. இத்தனை வேக ஓட்டம் வேண்டாம். மிகசாதாரணமாக, நிதானமாக, அமைதியாக, இந்த வாழ்க்கையை அனுபவிக்கலாம். அதற்கு நாம் எல்லோர்க்கும் இந்த உண்மை புரிய வேண்டும்.

சகோதரா,

இன்று உள்ள ஆட்சியின் நிலையை பார். கொள்ளை போகும் வளங்கள், யாருமே கேள்வி கேட்க முடியாத அளவிற்குஆணவம். முழு இந்தியாவையும் ஆள்கிறோம் என்கிற மமதை. நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை தங்களின் கட்சி ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருக்கவும் அல்லது ஆட்சியை பிடிக்கவும் ஒரு உபயமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆட்சி என்பது மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் ஒரு பொறுப்பு என்பது உணரப்படவில்லை. சேவையை நாம் எதிர்பார்க்கவில்லை.ஆனால் தேவையைக்கூட செய்யத்தவறியவர்கள் நமக்கு எதற்கு என்று கேள்வி கேட்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர், சமூக அவலம் நடைபெற்ற முசாபர் நகர் சென்று அங்குள்ள இளைஞர்கள் வெளி நாட்டு உளவு அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளனர் என்று நமது நாட்டு உளவுத்துறை அவருக்கு தெரிவித்ததாம். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நமது நாட்டு உளவு அமைப்புகள் ஒரு சில தேச விரோத செயல்பாடுகள் உணரப்படும்போது ஒற்று பார்த்து அதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தும். ஆனால் அரசை ஆளும் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர்க்கு சொல்லவே சொல்லாது, சொல்லவும் கூடாது. இப்படி நடந்தால் அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படாமல், கட்சிக்கு கட்டுப்பட்டு இருப்பதாகப்போகும்.இது ஒரு அவலம். ஜனநாயக கேலிக்கூத்து. இதை அனுமதிக்க வேண்டுமா, குறைகளைக்கூறிக்கொண்டே, அதை மாற்ற ஒரு முயற்சியும் செய்யவில்லை என்றால் அதனால் என்ன பயன். இதை மாற்ற இளைய சமுதாயம் முன்வர வேண்டும். சமூக நீரோட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

சகோதரா, அரசியல் கெட்டுவிட்டது என்றால் அதை மாற்று. நல்லதாக மாற்ற வேண்டுமே ஒழிய விலகி ஓடக்கூடாது. அப்படி செய்யும் போது ஆள்பவர்கள் தலைமுறை ஆளபிறந்த தலைமுறையாய் மாறும், தொடரும். ஜனநாயகம் தோற்கும் இதை மாற்ற வேண்டும். ஆசைப்பட்டால் போதாது.அதற்கு உழைக்க வேண்டும். பெரும் உழைப்பு அல்ல, ஒன்றே ஒன்று. தேர்தலில் நல்லவரை தேர்ந்தெடு.உனது ஒரு வாக்கு ஒரு மந்திரக்கோல் என்று புரியவை.தினமும் இதைப்பற்றி 5 நிமிடமாவது பேசு.மற்றவரை விவாதத்திற்கு கூப்பிட்டு உண்மையைவிளங்கிக்கொள். நாம் எடுத்துவைக்கும் ஒரு அடி நன்மையை நோக்கி நம் நாட்டையே அழைத்து செல்லும். வளங்கள் இங்கு பொதுவாக்கப்படும். தேவையானவர்கள், தேவைக்கேற்றவாறு தேவையான சமயத்தில் துய்த்துக்கொள்வார்கள். தலைமுறைகளுக்கு தேக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பதுக்கல் தேவை இல்லை.பங்குச்சந்தை எனும் மாயை தேவையில்லை. உழைப்பு அதற்கேற்ற ஊதியம், உண்மை ஒளிவு மறைவற்ற அரசாங்கங்கள். நமது பங்கேற்பு என்ற பெருமிதம் இவை இருத்தால் நாம் கூடி வாழ்ந்து கோடி நன்மை பெறமுடியும்.

தேர்தலே வா, இந்த முறை இந்தியாவை நாம் மாற்றுவோம், உன்னதம் ஓங்கட்டும்.

“நெமோ”

Categories: Article, November 2013, Whistle, கடிதம்
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: