மக்கள் பணத்தில் கட்சி விளம்பரம்

Friday, December 13th, 2013 @ 3:02PM

தற்போதுள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ, தங்களையும் தங்கள் கட்சி சின்னத்தையும் விளம்பரப்படுத்திக்கொள்வதில் முனைப்போடு இருக்கிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது மக்களின் பல கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து தனது கட்சியின் சின்னமான யானை சிலைகளை நாட்டின் பல பகுதிகளை நிறுவினார். விளைவு ஆட்சியை இழந்து நிற்கிறார். எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்த கருனாநிதி அவர்கள் எம்.ஜி.ஆருக்கு குடை போன்ற வடிவத்தில் அவரது சமாதிக்கு மேலே வடிவமைத்தார். “எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு குடை போன்று பாதுகாப்பாக இருந்தார்” என்று அதற்கு அர்த்தம் கூறப்பட்டது/ அடுத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஜெடயலலிதா அவர்கள் அதனை இடித்துவிட்டு வேறுவிதமாக வடிவமைத்து முகப்பிலே தனது கட்சியின் சின்னமான இரட்டை இலை போன்று வடிவமைத்தார். அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தபோது அந்த முகப்பையும் இடித்துவிட்டு இரட்டை இலையை முகப்பாக மாற்றினார். இதற்கான செலவுகள் எல்லாம் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் செலவழிக்கப்பட்டது. அரசு கொண்டு வரும் திட்டங்களில் முன்பு எல்லாம் தமிழக அரசின் சின்னங்களைத்தான் அச்சிடுவார்கள். ஆனால் இப்போது தங்கள் கட்சி சின்னங்களை அச்சிட்டு மக்கள் பணத்தில் கட்சி விளம்பரம் செய்கிறார்கள். அம்மா குடி நீர் பாட்டில்களில் இரட்டை இலை அச்சிடப்பட்டது. அவ்வகையில் இப்போது தமிழக அரசு விட்டுள்ள மினி பஸ்ஸிலும் இரு இரட்டை இலைகள் வரையப்பட்டுள்ளன. அரசு தரப்பில் அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பணியை, மக்கள் பணியாக செய்யாமல் கட்சியை, கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்துவதற்குரிய வேலையாகஸ் செய்தால், மாயாவதியும், கருனாநிதியும் ஆட்சியை இழந்ததுபோல் ஜெயலலிதா அவர்களும் ஆட்சியை இழக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. இவர்கள் செய்கின்ற கூத்துக்களையெல்லாம் பார்க்கையில் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படத்தில் வருகின்ற ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ, தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ.- ஜி,பி

Categories: Article, November 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: