இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது

Saturday, December 14th, 2013 @ 6:55AM

ஊடக வெளியீடு  (13-டிசம்பர்-2013):
இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இது சம்பந்தமாக பாராளுமன்றம் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளை ஆக்கிரமிக்கும் சட்டங்களிடமிருந்து குடிமக்களை காக்கும் அரிய கடமையை உச்ச நீதிமன்றத்திடம் இந்திய அரசியலமைப்பு ஒப்படைத்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியில் இருந்த, தனிமனித அந்தரங்கம், சுதந்திரம், கௌரவம் ஆகியவற்றை மதிக்காத சட்டத்தை சீர்திருத்த நீதிமன்றம் தவறிவிட்டது. “வயது வந்த இரண்டு இசைவளிக்கும் நபர்களுள் ஒரு தனியறையில் நடைபெறும் எதுவும் அவர்கள் தனிப்பட்ட விவகாரம்; அதை சட்டவிரோதமாக்குவது தவறு” என்று கருத்து தெரிவித்துள்ளார் லோக் சத்தா கட்சி நிறுவனர் திரு.ஜெயப்ரகாஷ் நாராயண்.
“ஓரினசேர்க்கையாளர்களின் எண்ணிக்கை மிக சிறிய அளவிலேயே உள்ளது” என்ற நீதிமன்றத்தின் கூற்று கவலையளிப்பதாக உள்ளது என லோக் சத்தா கட்சி கருதுகிறது. ஒரு குடிமகனை பாதித்தாலும் அது தீய சட்டம் தான்; அதை முறைபடுத்த முனைவது நம் கடமை ஆகும்.
இ.பி.கோ 377 சட்டத்தை மறுபரிசீலனை செய்ய பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 1300-கும் மேற்பட்ட காலனியாதிக்க சட்டங்கள் சுதந்திர இந்தியாவிற்கு தகுதியற்றன என்று முந்தைய சட்ட குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன. சில சட்டங்கள் 1839-இல் இயற்றப்பட்ட அளவு பழமையானதாகவும் அடிப்படை உரிமைகளை கேள்விகுறியாக்குவதாகவும் அமைந்துள்ளன.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போதய சட்ட குழு, காலனியாதிக்க சட்டங்களை சீரிய முறையில் மறுஆய்வு  செய்யவும், பாராளுமன்றம் நவீன காலத்திற்கேற்ப சட்ட மறுபரிசீலனை செய்யவும் சட்டதிருத்தங்கள் செய்யவும் லோக் சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: