மாற்றத்தை நோக்கி மாநில செயற்குழு

Saturday, December 28th, 2013 @ 2:47PM

லோக் சத்தா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நமது கட்சி தலைமை அலுவலகத்தில் நவம்பர் மாதம் 24ம் தேதி நடைபெற்றது. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில் நமது கட்சியின் முக்கிய தூணாக கருதப்படும் விசில் மாதப் பத்திரிக்கையை பதிவு செய்வது தொடர்பாக முக்கிய விவாதம் மேற்கொள்ளப்பட்டது. முடிவில் நமது கட்சியின் மகளிர் அணி செயலாளரும், சட்ட ஆலோசகருமான எலிசபெத் பெயரில் பத்திரிகையை பதிவு செய்வது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வர தீவிர போராட் டங்களுக்கு உறுப்பினர்களைத் தயார் படுத்தவும் அதற்கான முயற்சிகளை மாவட்டங்கள் தோறும் செய்யவும் நிர்வாகிகளை இச்செயற்குழு கேட்டுக் கொண்டது.

நிதிநிலை அறிக்கை

இம்மாத நிதிநிலை அறிக்கையை பொருளாளர் அசோக் ராஜேந்திரன் தாக்கல் செய்தார். மாதந்தோறும் அளிக்கும் நன்கொடையாளர்களிடம் மீண்டும் பேசி தொடர்ந்து அவர்கள் பங்களிப்பை புதுப்பித்து வருவாய் பற்றாக்குறையை சரி செய்து, நிதி நிலையை ஓரளவிற்கு திருப்திகர நிலைமைக்கு கொண்டு வந்த பொருளாளருக்கு இச்செயற்குழு மிகப்பெரிய பாராட்டுதலை தெரிவித்தது. மேலும் மாநிலத்திலும், மாவட்டங்களிலும் மாதா மாதம் வரவு செலவு கணக்கு மாநில தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட அறிக்கைகள்

சென்னை, கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். மாவட்டந்தோறும் சேவை பெறும் உரிமைச் சட்டத்திற்கான தேவையை வலியுறுத்தி நடத்தப் போகும் போராட் டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். மாவட்ட நிர் வாகிகளின் செயல்பாடுகளில் மிகவும் திருப்திகர மாக இருப்பதாகவும் இன்னமும் தீவிரமாக உறுப்பினர்களை சேர்த்து பொருளாதார தன்னிறைவு பெற இச்செயற்குழு அவர்களை கேட்டுக்கொண்டது.

தொழிற்சங்க அறிக்கை

மாநில தொழிற்சங்க தலைவர் சங்க செயல்பாடு கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய் தார். வர்த்தமான் என்ற தனியார் நிறுவன ஊழி யர்கள் 7 பேருக்கு அவர்களுக்கு சேர வேண்டிய செட்டில்மெண்ட் தொகையை நிர்வாகம் முழுமை யாக கொடுக்காமல் தாமதித்த போது லோக் சத்தா தொழிற்சங்கம் தலையிட்டு அவர்களுக்கு சேர வேண்டிய தொகை முழுவதுமாக வாங்கிக் கொடுத்து தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார். மேலும் பல தொழிற்சங்க சாதனைகளை எடுத்துரைத்து செயற்குழுவின் பாராட்டுதல்களைப் பெற்றார்.

உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர் அட்டை தயார் செய்தல், குறித்த நேரத்தில் உறுப்பினர் அட்டைகள் வினியோகம் செய்தல் ஆகியவற்றை
முறைப்படுத்த கூடுதலாக அலுவலர் ஒருவரை நியமிக்க இச்செயற்குழு ஒப்புதல் அளித்தது. மேலும் அந்த அலுவலருக்கு மாத ஊதியம் 5000
ரூபாயை தனது சொந்த பொறுப்பில் வழங்க முன்வந்த உறுப்பினர் சேர்க்கை செயலாளர் ராஜ் வரதராஜன் அவர்களை இச்செயற்குழு மனதார பாராட்டுகிறது. 10 ரூபாய் உறுப்பினர் விண்ணப்பம் தயார் செய்யவும், கிராமப்புறங்களில் உறுப்பினர் களை அதிக அளவில் சேர்க்க இதனை பயன் படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

செயல் வீரருக்கு பாராட்டு

PrizetoPalani

நமது கட்சி செயல்பாடுகளில் அதிக அக்கறையுடனும், ஆர்வமுடனும், உத்வேகத்துடனும் செயல்பட்டு வரும் நமது சென்னை மாவட்ட உறுப்பினர் சேர்க்கை செயலாளர் பழனிகுமார் அவர்களை இச்செயற்குழு உற்சாகத்துடன் பாராட்டுகிறது. கடந்த மாதம் இவர் செய்த செயல்களை பாராட்டி நமது இளைஞர் அணி செயலாளர் ஜெய் கணேஷ் அவருக்கு ஒரு அலைபேசியை அன்பளிப்பாக கொடுத்து அவரை மேலும் ஊக்கப்படுத்தினார். அதற்காக ஜெய் கணேஷ் அவர்களுக்கும் இச்செயற்குழு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.மொத்தத்தில் இச்செயற்குழு நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என்றால், அது மிகையாகாது.

தொகுப்பு  : தினகரன் போஸ் , மாநில பொதுச் செயலாளர்.

Categories: Article, December 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: