ஓயாத அலைகள் – பாகம் 6

Tuesday, December 31st, 2013 @ 9:17AM

                              கச்ச(ட்சி)த் தீவு அரசியல் – 5

மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவில் இலங்கை மற்றும் இந்தியா என்ற இரு நாட்டுகளுக்கிடையே கடல் எல்லைக்கோடு மற்றும் அது தொடர்புடைய  விசயங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்

                                23 மார்ச் 1976

 இந்திய குடியரசு மற்றும் இலங்கை குடியரசு,

பாக் ஜலசந்தியின் எல்லைக்கோடு இந்தியா மற்றும் இலங்கை குடியரசுகளுக்கிடையில் வரலாற்று நீர்ப்பரப்பு எல்லைக்கோடு மற்றும் அது தொடர்புடைய விசயங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் 26 மற்றும் 28 ஜூன் 1974 வாயிலாக தீர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்து,

மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவில் இரு நாட்டுகளுக்கிடையே கடல் எல்லைக்கோட்டை உறுதிபடுத்துவதன் மூலம் எல்லைக்கோட்டை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கில்

ஒத்துக்கொண்டவை கீழ்வருமாறு:

             சட்டப்பிரிவு கூறு 1

மன்னார் வளைகுடாவில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான கடல் எல்லைக்கோடு  பெரிய வட்டத்தின் புசையில் (arcs of Great Circle), வரையறுக்கப்பட்ட அஷகரேகை மற்றும் தீர்க்கரேகையால் (Latitude and Longitude) பின் வரும் நிலைகளுக்கு இடையில், இதே வரிசை முறையில் அமையும்.

நிலை 1 m : 09◦ 06’ வடக்கு, 79◦ 32’ கிழக்கு

நிலை 2 m : 09◦ 00’ வடக்கு, 79◦ 31.3’ கிழக்கு

நிலை 3 m : 08◦ 53’.8 வடக்கு, 79◦ 29’.3 கிழக்கு

நிலை 4 m : 08◦ 40’.0 வடக்கு, 79◦ 18’.2 கிழக்கு

நிலை 5 m : 08◦ 37’.2 வடக்கு, 79◦ 13’.0 கிழக்கு

நிலை 6 m : 08◦ 31’.2  வடக்கு, 79◦ 04’.7 கிழக்கு

நிலை 7 m : 08◦ 22’.2  வடக்கு, 78◦ 55’.4 கிழக்கு

நிலை 8 m : 08◦ 12’.2  வடக்கு, 78◦ 53’.7 கிழக்கு

நிலை 9 m : 07◦ 35’.3  வடக்கு, 78◦ 45’.7 கிழக்கு

நிலை 10 m : 07◦ 21’.0  வடக்கு, 78◦ 38’.8 கிழக்கு

நிலை 11 m : 06◦ 30’.8  வடக்கு, 78◦ 12’.2 கிழக்கு

நிலை 12 m : 05◦ 53’.9  வடக்கு, 77◦ 50’.7 கிழக்கு

நிலை 13 m : 05◦ 00’.0  வடக்கு, 77◦ 10’.6 கிழக்கு

நிலை 13 m பிறகான விரிவிபடுத்துதல் பிறகு மேற்கொள்ளப்படும்.

 

சட்டப்பிரிவு கூறு 2

வங்காள விரிகுடாவில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான கடல் எல்லைக்கோடு  பெரிய வட்டத்தின் புசையில் (arcs of Great Circle), வரையறுக்கப்பட்ட அஷகரேகை மற்றும் தீர்க்கரேகையால் (Latitude and Longitude) பின் வரும் நிலைகளுக்கு இடையில், இதே வரிசை முறையில் அமையும்.

நிலை 1 b : 10◦ 05’.0 வடக்கு, 80◦ 03’ கிழக்கு

நிலை 1 ba : 10◦ 05’.8 வடக்கு, 80◦ 05’ கிழக்கு

நிலை 1 bb : 10◦ 08’.4 வடக்கு, 80◦ 09’.5 கிழக்கு

நிலை 2 b : 10◦ 33’.0 வடக்கு, 80◦ 46’.0 கிழக்கு

நிலை 3 b : 10◦ 41’.7 வடக்கு, 81◦ 02’.5 கிழக்கு

நிலை 4 b : 11◦ 02’.7 வடக்கு, 81◦ 56’.0 கிழக்கு

நிலை 5 b : 11◦ 16’.0 வடக்கு, 82◦ 24’.4 கிழக்கு

நிலை 6 b : 11◦ 26’.6 வடக்கு, 83◦ 22’.0 கிழக்கு

 

சட்டப்பிரிவு கூறு 3

சட்டப்பிரிவு கூறு 1 மற்றும் 2ல் குறிக்கப்பட்ட நிலைகளின் ஆயங்கள் (Co-ordinates) புவியியல் ஆயங்கள். அவற்றை இணைக்கும் நேர்க்கோடுகள் இணைக்கப்பட்டுள்ள நிரல் படத்தில் (Chart) குறிக்கப்பட்டு இரண்டு அரசாங்கங்களால் அனுமதியளிக்கப்பட்ட நில அளவர்களால் கையெழுத்து இடப்பட்டது.

 

சட்டப்பிரிவு கூறு 4

கடல் மற்றும் கடலின் நிலப்பரப்பு மேல் சட்டப்பிரிவு கூறு 1 மற்றும் 2ல் குறிக்கப்பட்ட நிலைகளின் நிலைகளின் உண்மையான அமைவிடம் உறுதி செய்ய, இரண்டு அரசாங்கங்களால் அனுமதியளிக்கப்பட்ட நில அளவர்களால் இருவரும் ஏற்றுக்கொண்ட முறையை பின்பற்றலாம்.

 

சட்டப்பிரிவு கூறு 5

(1)  மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லைக்கோடுகளுக்கு இரு புறமும் இருக்கும் தங்கள் பகுதியில், இரு தரப்பும் வரலாற்று நீர்ப்பரப்பு மற்றும் கடல் பிரதேசம், தீவுகள் மீது தங்கள் இறையாண்மை மற்றும் அதிகார எல்லை மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

(2)  மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லைக்கோடுகளுக்கு இரு புறமும் இருக்கும் தங்கள் பகுதியில், இரு தரப்பும் கண்டத்திற்குரிய கடல் நீர்ப்பரப்பு மற்றும் தனிப்பட்ட பொருளாதார மண்டலங்கள், உயிருடனோ அல்லது இல்லாமலோ இருக்கும் அதன் வள ஆதாரங்கள் மீது தங்கள் இறையாண்மை மற்றும் அதிகார எல்லை மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

(3)  சர்வதேச விதிகளுக்கு கட்டுபட்டும், கடல் பிரதேசம் மற்றும் தனிப்பட்ட பொருளாதார மண்டலங்களில் தங்களுடைய நாட்டின் விதிகளுக்கு கட்டுபட்டும் தங்களின் கடற் பயண உரிமைகளை மதிக்க வேண்டும்.

 

சட்டப்பிரிவு கூறு 6

ஒரு கனிம நில எண்ணெய் (Petroleum) அல்லது எரிவாயு கட்டமைப்பு அல்லது களம், அல்லது ஒரு கனிம கட்டமைப்பு அல்லது மணல் அல்லது சரளைக்கல் போன்ற கணிம வளம் கொண்ட களம், சட்டப்பிரிவு கூறு 1 மற்றும் 2ல் குறிக்கப்பட்ட எல்லைக்கோட்டில் இருந்து, எல்லைக்கோட்டிற்கு ஒரு புறம் இருப்பது, எல்லைக்கோட்டின் மற்ற பக்கத்திலிருந்து பகுதியாகவோ அல்லது முழுதும் பயன்படுத்தப்பட்டால், இரு நாடுகளும் அந்த வளத்தை எவ்வளவு முனைப்புடன் பயன்படுத்தலாம் எனவும் அவற்றை எவ்வாறு பிரித்துக்கொள்ளலாம் எனவும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திகொள்ளலாம்.

 

சட்டப்பிரிவு கூறு 7

இந்த ஒப்பந்தம் ஒப்புதல் அளித்தபின் ஏற்றுக்கொள்ளப்படும். ஒப்புதல் பரிமாற்றம் செய்யப்படும்பொழுது இந்த ஒப்பந்தம் வலிமைபெறும். இது கூடிய விரைவில் நடக்கும்.

1974 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தில் இருந்த சட்டப்பிரிவு கூறு 5 மற்றும் 6 குறித்து 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் ஒன்றும் சொல்லப்படவில்லை. இன்று வரை பெரும் விவாதபொருளாகவும், தமிழக மீனவர்களின் மொத்த துன்பத்திற்கும் ஆரம்ப புள்ளியாக இதுவே பார்க்கப்படுகிறது.

எல்லாம் சரி. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதிற்கான காரணம் அல்லது காரணங்கள் என்ன?

– அலைகள் மோதும்.

– ஜெகதீஸ்வரன்

Categories: Article, November 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: