குடி மக்கள் சாசனம் – 1

Thursday, January 30th, 2014 @ 8:35PM

இந்த பகுதியில் ஒவ்வொரு மாதமும் சேவை பெறும் உரிமை சட்டம் வலியுறுத்தும் அனைத்து துறைகளின்‘குடிமக்கள் சாசனம்’ பற்றி பார்க்க இருக்கிறோம். ‘குடிமக்கள் சாசனம்’ என்பது அந்த அரசுத் துறை என்னென்ன சேவைகளை வழங்குகிறது. அதற்கான கால நிர்ணயம் என்ன என்பதை உறுதி செளிணியும் ஆவணம்.

துறை : உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

எண் சேவை காலவறை (தேவையான ஆதாரம் அளிக்கப்படும் பட்சத்தில்) விண்ணப்பம் எந்த அலுவலருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்
1. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல், வயது திருத்தம் மூன்று நாட்கள் உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
2. முகவரி மாற்றம் (அதே நியாய விலைக்கடையின் அதிகார வரம்பிற்குள்) மூன்று நாட்கள் உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
3. முகவரி மாற்றம் (கடை மாற்றத்துடன்) ஏழு நாட்கள் உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
4. குடும்ப அட்டை ஒப்படைப்புச் சான்றிதழ் வழங்கல்
(வேறு மாநிலங்களுக்கு இதர நகரங்களுக்கு முதலானவை)
இரண்டு நாட்கள் உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
5. மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது தாலுகா /
மண்டலத்திற்கு பெறப்பட்ட ஒப்புவிப்பு சான்று பேரில் முகவரி மாற்றம்
ஏழு நாட்கள் உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
6. புதிய குடும்ப அட்டை வழங்குதல் (உரிய ஆவணங்கள் அளிப்பதன் அடிப்படையில் வழங்குதல்) அறுபது நாட்கள் உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
7. நகல் அட்டை நாற்பதைந்து நாட்கள் உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
8. குடும்ப அட்டை இல்லா சான்று ஏழு நாட்கள் உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
9. அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் சேர்வதற்கு அறுபது நாட்கள் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட வழங்கல் அதிகாரி
10. இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்குதல் அறுபது நாட்கள் (தேவையான ஒப்பளிப்பு இருப்பின்) உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்
11. பொது விநியோக கடை பற்றிய புகார் முப்பது நாட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட வழங்கல் அலுவலர் / துணை ஆணையர் /
உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலர்.
12. பொது விநியோக திட்டம் பற்றி தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் தகவல்கள் பெற முப்பது நாட்கள் மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் வட்ட வழங்கல்
அலுவலர் உதவி ஆணையரின் நிர்வாக அலுவலர்

Categories: Article, December 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: