தமிழகம் முழுவதும் பைக் யாத்திரை ​துவக்க விழா அழைப்பிதழ்

Thursday, January 2nd, 2014 @ 6:07PM

லஞ்சத்துக்கு எதிரான ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ விழிப்புணர்வு​

அன்பு நண்பர்களே,

லோக் சத்தா கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்போகும் ‘பைக் யாத்திரையின்’ துவக்க விழாவிற்கு உங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

மாநிலத் தலைவர் திரு. தெ. ஜெகதீஸ்வரன் மற்றும் இளைஞரணி செயலாளர் திரு. ஜெய்கணேஷ் ஆகியோர் பங்கேற்கும் இந்த யாத்திரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் 4 பகுதிகளாக கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயணித்து ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ மூலமாக லஞ்சத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த யாத்திரையின் நோக்கம்.

இந்த யாத்திரையின் துவக்க விழா ஞாயிறு, 5-ஜனவரி-2014 அன்று சென்னையில் பைக் பேரணியுடன் துவங்கும்.

துவக்க விழா பைக் பேரணி துவங்கும் இடம்: டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம்,  ராஜா அண்ணாமலை புறம், சென்னை. மாலை 3 மணி, 05-ஜனவரி-2014.

துவக்க விழா பைக் பேரணி முடியும் இடம்: மகாத்மா காந்தி சிலை, மெரினா கடற்கரை, மாலை 4:30 மணி, 05-ஜனவரி-2014.

bike-yatra-poster

துவக்க விழா ஃபேஸ்புக் நிகழ்வு: https://www.facebook.com/events/208782012643559/

யாத்திரையின் நோக்கம் விளக்கும் காணொளி: https://www.youtube.com/watch?v=N4y9_og7CcE

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: திரு. ஜெய்கணேஷ் (9791050514)

பைக் யாத்திரையின் துவக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

Categories: Activities, Right to Services
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: