லோக் சத்தா கட்சி – பயணிகள் பாதுகாப்பு கோரி குரோம்பேட்டை அணி கோரிக்கை மனு
Friday, January 10th, 2014 @ 7:31PM
லோக் சத்தா கட்சி சென்னை மாவட்ட அணி, குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் பயணிகளுக்கு பாதுகாப்பான நடைபாதை கோருகிறது.
தற்போது பல்லாவரம் நகராட்சி குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் மின்தூக்கியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த பணி போதிய பாதுகாப்பு இல்லாமல் நடைபெறுகிறது. பேருந்து நிலையம் அருகிலேயே மிகப்பெரிய குழிகள் மூடப்படாமல் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
இதற்காக லோக் சத்தா கட்சி சார்பில், கடந்த சில நாட்களாக 1000 பயணிகளிடமிருந்து கையெழுத்துகள் வாங்கியுள்ளோம். இந்த கையெழுத்துகளுடன் கூடிய கோரிக்கை மனுவை லோக் சத்தா கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் திரு. குமார் அவர்கள் தலைமையில் பல்லாவரம் நகர் மன்ற தலைவருக்கு நாளை சனிக்கிழமை, 11-ஜனவரி-2014 அன்று காலை 9 மணிக்கு கொடுக்க உள்ளோம்.
நீங்களும் இதில் கலந்து கொண்டு பொது மக்களின் பலத்தை நிரூபிக்க வேண்டுகிறோம்.
கோரிக்கை மனுவின் பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: குமார், சென்னை மாவட்ட தலைவர் (9791050519)
Categories: Activities, Press Releases
Tags: Chrompet