லோக் சத்தா தலைவர்கள் பைக் யாத்திரை – திருவள்ளூர் மாவட்டம்

Thursday, January 9th, 2014 @ 11:55AM

லோக் சத்தா கட்சி தலைவர்கள் திரு. ஜெகதீஸ்வரன் மற்றும் திரு. ஜெய்கணேஷ் ஆகியோரின் ஊழலுக்கு எதிரான தமிழகம் முழுவதுமான பைக் யாத்திரையின் ஓர் அங்கமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் ஊத்துக்கோட்டை, திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள கிராமங்களுக்கு சென்று மக்களின் உண்மையான பிரச்சனைகளை அறிய கள ஆய்வும் மேற்கொண்டனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம், அவரின் அதிகாரத்திற்குட்பட்ட அரசு சேவைகளுக்கு குடிமக்கள் சாசனம் பதிப்பித்து, காலதாமதமில்லா அரசு சேவைகளை உறுதி செய்ய கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அவர்கள் குத்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர் திரு. இளங்கோ அவர்களை சந்தித்து பேசினர். அப்பகுதி மக்களிடம் பேசிய திரு. ஜெகதீஸ்வரன், மக்கள் தற்போதுள்ள அரசியல் கட்சிகளால் சலிப்படைந்து விட்டதையும், மாற்று அரசியலை எதிர்நோக்கியுள்ளதையும் உணர முடிவதாக தெரிவித்தார்.

இருவரும் அவர்களின் திட்டப்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் செல்கிறார்கள்.

இவர்களின் பைக் யாத்திரையை பற்றிய தினமணி பத்திரிகை செய்தி.

Shashin Error:

No photos found for specified shortcode

Categories: Activities, Right to Services
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: